மாரடைப்புக்கு காரணமான LDL கொலஸ்ட்ராலை... எகிற வைக்கும் சில உணவுகள்

Foods That Increases LDL Cholesterol: மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாகவும், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைவாகவும் இருக்க வேண்டும். கெட்ட கொலஸ்ட்ரால் அளவு நீண்ட நாட்களுக்கு கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால், மாரடைப்பு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இன்றைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக, கொலஸ்ட்ரால் பிரச்சனை என்பது, பெரும்பாலானோருக்கு இருக்கும் பொதுவான பிரச்சனையாக உள்ளது. முதியவர்களுக்கு, இதய நோய்கள் மாரடைப்பு ஏற்பட்ட காலம் போய், இப்போது இளைஞர்களுக்கு அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுகிறது.

1 /8

Foods That Increases LDL Cholesterol: உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக இருந்தால், அது இதய தமனிகளில், அடைப்பை ஏற்படுத்தி, இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை பாதித்து, மாரடைப்பை ஏற்படுத்துகிறது. அளவு கட்டுக்குள் இருக்க, சில உணவுகளை தவிர்க்க வேண்டியது மிக அவசியம்.  

2 /8

சுட்ட எண்ணெயில் பொரித்த உணவுகள்: எண்ணெயில் பொரித்த உணவுகள், அதிலும் குறிப்பாக மீண்டும் மீண்டும் சூடாக்கப்பட்ட, சுட்ட எண்ணெயில் பொரித்த உணவுகள், கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டவை. இவற்றை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டால், மாரடைப்பு அபாயம் பல மடங்கு அதிகரிக்கும்.  

3 /8

அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள்: அதிக கொழுப்பு உள்ள பால் பொருட்களில், கொலஸ்ட்ராலை எதிர வைக்கும் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ளது. கொழுப்பு உள்ள பால், சீஸ் என்னும் பாலாடை கட்டி, கெட்ட கொழுப்பை அதிகரித்து இதய நோய் ஆபத்தை அதிகரிக்கும்.  

4 /8

துரித உணவுகள்: பீட்சா, பிரெஞ்ச் ப்ரைஸ், பர்கர் போன்ற துரித உணவுகளில், டிரான்ஸ் கொழுப்பு அதிகம் உள்ளது. சிப்ஸ் போன்ற அதிக உப்பு உண்ட பொருட்களும் இதய ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்க கூடியவை. இதனை அடிக்கடி சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

5 /8

அதிக இனிப்பு உள்ள உணவுகள்: ஐஸ்கிரீம், குக்கீஸ், கேக் வகைகள், ஐஸ்கிரீம் வகைகள், இனிப்பு வகைகள், செயற்கைப் பழச்சாறுகள், சோடா பானங்கள் போன்றவற்றில் சர்க்கரை மிக அதிக அளவு இருக்கும். இதில் உள்ள அதிக அளவிலான கலோரிகள், கெட்ட கொழுப்பாக மாறி, ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும்.

6 /8

முட்டையின் மஞ்சள் கரு: முட்டை புரதச்சத்து நிறைந்த ஒரு சூப்பர் ஃபுட் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் முட்டையின் மஞ்சள் கருவில் அதிக கொழுப்பு உள்ளது. எனவே, உடல் பருமன் உள்ளவர்கள், இதய நோய் பிரச்சனை உள்ளவர்கள், முட்டையின் மஞ்சள் கருவை அளவோடு சாப்பிடுவது நல்லது.

7 /8

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்: கொழுப்பு அதிகம் உள்ளவை. கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த நினைப்பவர்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை தவிர்ப்பது நல்லது. அதேபோல் சிவப்பு இறைச்சியிலும் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ளதால், அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.