முக அழகு குறிப்புகள்: தேன் என்பது அபூர்வமான மருத்துவ குணங்களைக் கொண்டது. உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அழகுக்கும் சரும ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தப்படும் தேன், அழகு சாதன பொருட்களில் முக்கிய இடம் பிடிக்கிறது. தேனை நமது சருமத்தில் இரவில் பயன்படுத்துவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. தேனில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது பல தோல் பிரச்சினைகளை சமாளிக்கும். முகப்பரு மற்றும் வெயிலில் செல்வதால், ஏற்படும் கருமை போன்றவை அகலும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேனை பயன்படுத்தினால், முகத்தில் வந்து அழகைக் குறைக்கும், முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் ஒயிட்ஹெட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்கலாம், அதே நேரத்தில் எண்ணெய் சருமம் மற்றும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கும் தேன் நன்மை பயக்கும். தேனை பயன்படுத்துவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. இரவு நேரத்தில் முகத்திலும், சருமத்திலும் தேனை தடவிவிட்டு, அதை காலையில் கழுவினால் போதும், சில நாட்களில் மின்னும் சருமத்துடன் மிடுக்காய் நடைபோடலாம்.


மேலும் படிக்க | Honey For Skin: முகத்தில் உள்ள தழும்புகள் மறைய தேன்


முகப்பரு மற்றும் தழும்புகளை போக்கும் தேன்
தேனின் இயற்கையான என்சைம் செயல்பாடு, சருமத் துளைகளில் படியும் அழுக்கு, எண்ணெய் போன்ற அசுத்தங்களை நீக்குகிறது. அதோடு, சருமத்தை மென்மையாக்குகிறது. எனவே, முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படாமல் சருமம் இயல்பான அழகுடன் மின்னும். தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்பு, முகப்பரு ஏற்படாமல் தடுக்கிறது என்றால், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சீர்படுத்த உதவுகிறது.


சூரிய ஒளியின் தாக்கத்தைப் போக்கும்
சூரிய ஒளி உங்கள் சருமத்தின் நிறத்தை மங்கச் செய்துவிடும். இதை தவிர்க்க, இரவு நேரத்தில் தேனை முகத்தில் பூசி, அதை காலையில் கழுவி வருவது, சூரிய ஒளியால் முகம் கருத்துப் போகும் பிரச்சனையைத் தடுக்கும். சூரியனின் கதிர்களால் சேதமடைந்த சருமத்தின் திசுக்களுக்கு ஊட்டமளிக்கிறது தேன். வலி ​​மற்றும் வீக்கத்தைக் குறைத்து, நிறமிகளை நீக்கும் தேன் சூரியனின் கதிர்களால் ஏற்படும் சரும சிக்கல்களை தீர்க்கிறது.  



தோலின் pH ஐ சமப்படுத்துகிறது
தேனை சருமத்தில் தடவுவது எண்ணெய் பசையான சருமத்தை சீர் செய்யவும், அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியை குறைக்கவும் சிறந்த வழியாகும். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் முகத்தில் தேனைப் பயன்படுத்துவது நல்லது.  


வறண்ட சருமத்தை சீராக்கும் தேன்
மந்தமான, நீர்சத்து இல்லாத மற்றும் வறண்ட சருமத்தை சமாளிக்க தேன் ஒரு சிறந்த தீர்வாகும். தேன் இயற்கை ஈரப்பதம் கொண்டது. இது சருமத்தின் ஆழம் வரை சென்று அதை ஈரப்பதமாக்குகிறது. கூடுதலாக, இது பல இயற்கை என்சைம்களைக் கொண்டுள்ளது, அவை ஈரப்பதத்தை சருமத்தின் ஆழமான அடுக்குகளில் ஊடுருவிச் செல்ல உதவுகின்றன, இதனால் சருமத்தின் பொலிவு கூடும். 


மேலும் படிக்க | ஆரோக்கியத்திற்கு உகந்த இந்த காய்கறிகளே உடல்நலனுக்கு எதிராகும்


முகச் சுருக்கங்களை குறைப்பதில் பயனுள்ளது தேன்
தேனில், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உட்பட சருமத்தை மென்மையாக்கும் மற்றும் பாதுகாக்கும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில், அமினோ அமிலங்கள் மற்றும் குளுக்கோனிக் அமிலம் ஆகியவை நிறைந்துள்ளது, இது செல்லுலார் மட்டத்தில் சருமத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தை சரிசெய்ய உதவும். இரவு முழுவதும் தேனை முகத்தில் தடவி, காலையில் அதை கழுவி வந்தால், கொலாஜன் அதிகரித்து, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சருமத்தில் சொறி, அரிப்பு தொல்லையா? இந்த வீட்டு வைத்தியங்களால் நிவாரணம் பெறலாம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ