உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும். இன்றைய காலகட்டத்தில் பலரும் முதுகு வலியால் அவதிப்படுகின்றனர். அதிலும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு முதுகுவலி என்பது நிரந்தரமாக மாறிவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதுகுவலியை நிரந்தரமாக விரட்ட வேண்டுமா? இந்த கட்டுரை உங்களுக்கானதுதான். கடுமையான இடுப்பு அல்லது முதுகு வலியால் அவதிப்படுபவர்களால் கனமான பொருட்களைத் தூக்க முடியாது.


நீண்ட நேரம் நிற்கவோ, உட்காரவோ முடியாமல் சிரமப்படுவார்கள் பலர். அதில் சிலருக்கு முதுகு, இடுப்பு, கால் என மூன்று பகுதிகளிலும் ஒரே நேரத்தில் கடுமையான வலி இருக்கும். இடுப்பு மற்றும் மூட்டுக்கு உரிய நரம்புகளில் ஏற்படும் பிரச்சனையால் இப்படி வலி ஏற்படும்.


Also Read | பல் வலியா? உடனடி தீர்வு இதோ…


இந்த முதுகு அல்லது இடுப்பு வலியை நிரந்தரமாக விரட்ட ஒரு அற்புதமான பானம் உள்ளது. இயற்கை முறையில் தயாரிக்கப்படும் இந்த பானத்தைக் குடித்தால் வலிகள் பறந்தோடிவிடும்.


முதுகு வலிக்கு அருமருந்தாக விளங்கும் அற்புதமான இயற்கை பானத்தை தயாரிப்பதும் மிகவும் சுலபம் தான்.


தேவையான பொருட்கள் :
பால் – 200 மில்லி
பூண்டு – 4 பற்கள்
தேன் - சுவைக்கேற்ப


Also Read | ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கீரையின் அற்புத நன்மைகள்


பாலை நன்றாக காய்ச்சவும்.  அதில் பூண்டு பற்களைத் தட்டிப் போட்டு, மிதமான தீயில் சில நிமிடங்கள் வேக வைத்து இறக்கினால் போதும், வலியை பஞ்சாய் பறக்கச் செய்யும் அற்புத பானம் தயார். இதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.


இந்த பூண்டுப் பாலை தினமும் குடிக்க வேண்டும். இதை தொடர்ந்து குடித்து வந்தால், இடுப்பு மற்றும் முதுகு வலி குறைவதை உணரலாம். வலியில் இருந்து முற்றிலும் நிவாரணம் கிடைத்துவிட்டால் இந்த பாலைக் குடிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்.


இந்த பானம் இடுப்புமூட்டுக்குரிய நரம்புகளில் உள்ள வலி மற்றும் காயங்களைக் கட்டுப்படுத்தும். பூண்டில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் வலியை மீண்டும் வரவிடாது. இந்த பானத்தை குடித்து வருவதோடு, இடுப்பு மற்றும் மூட்டுக்குரிய நரம்புகளின் வலியைக் குறைக்க உதவும் உடற்பயிற்சியையும் செய்து வந்தால், முதுகு வலி போயே போச்சு என்று மகிழ்ச்சியுடன் சொல்லலாம். 


Also Read | எடை இழப்புக்கு பச்சை பூண்டு நல்லதா? உண்மை என்ன?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR