ஆயுர்வேதம் என்னும் பண்டைய அறிவியலில் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான ஆதாரங்கள், நோய்க்கான தீர்வுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. ஆயுர்வேதத்தில், உணவுக் கட்டுப்பாடு மிகவும் முக்கியமானது. உயிர், உணவு மற்றும் மனித உடலின் கூறுகளுக்கு இடையே உள்ள தொடர்பை கண்டறிந்து, நோயை குணப்படுத்துவது எப்படி என்பதை ஆயுர்வேதம் விளக்குகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாரம்பரிய இந்திய உணவுகளை தயாரிக்கும் போது,  உணவு பதப்படுத்துதல், அதன் பாதுகாப்பு நுட்பங்கள்  ஆகியவற்றை பற்றிய பாரம்பரிய ஞானம் இந்தியாவில் பல தலைமுறைகளாக நிரூபிக்கப்பட்டுள்ளது.  பல்வேறு உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய பொருட்கள் அனைத்து இந்திய சமையலறைகளிலும் எளிதாகக் காணப்படுகின்றன, மேலும் அவை உடல்-குணப்படுத்தும் ரசாயனங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், புரோபயாடிக்குகள் போன்ற கூறுகள் உள்ளன.


நமது சமையல்  அறையில் உள்ள அஞ்சறை பெட்டியில் இருக்கும் மசாலா பொருட்கள்சிறந்த ஆயிர்வேத மருந்துகளாக உள்ளன: 


சீரகம்: சீரகம் அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக ஒரு செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. இது வாயு பிரச்சனைகளை நீக்குவதோடு, மலமிளக்கியாகவும் செயல்படும். இது செரிமான நெருப்பு அல்லது அக்னியை தூண்டுகிறது. அதாவது மெட்டாபாலிஸத்தை அதிகரிக்கிறது.


தனியா: வயிற்றில் அதிக உஷ்ணம், ஆசிடிடி பிரச்சனையினால் அவதிப்படுபவர்களுக்கு குளிர்ச்சியை தரும் தன்மை கொண்ட இந்த மசாலா,  வீக்கம், வாய்வு பிரச்சனையை நீக்குவதோடு, பசியையும் தூண்டுகிறது. மேலும்,  வயிற்றில் உள்ள பூச்சிகளை கொல்கிறது.


ALSO READ | Health Alert! மறதி, குழப்பம் அதிகமாக இருக்கிறதா; Vitamin B குறைபாடு இருக்கலாம்!


பெருங்காயம்:  வாசனைக்கு பெயர் போன பெருங்காயம் செரிமானத்தை மேம்படுத்துவதில் மிகவும் பயனுள்ள மசாலா. இதன் ஆரோக்கிய பண்புகள் செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது மற்றும் வீக்கம், வாய்வு, வயிற்று வலி, பிடிப்புகள் மற்றும் ஏப்பம் ஆகியவற்றைக் போக்க  உதவுகிறது.


மஞ்சள்:  இந்திய உணவுகளில் ஒரு மிக முக்கியமான அங்கமாக இருக்கும் இந்த மஞ்சள் ஆயுர்வேத வைத்தியங்களில் முக்கிய இடத்தில் உள்ளது. மஞ்சள் கசப்பு மற்றும் துவர்ப்புத்தன்மை கொண்டது. பித்த தோஷத்திற்கு நல்லது. இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றுகிறது.  இது மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெறவும் பரிந்துரைக்கப்படுகிறது.


ALSO READ | நாக்கின் நிறமும் ஆரோக்கியமும்; ‘இந்த’ நிறங்கள் தீவிர நோயின் எச்சரிக்கை மணி!


ஏலக்காய்: கார வகை, இனிப்பு வகை என அனைத்து இந்திய உணவுகளிலும் பயன்படுத்தப்படுவதொடு,  வாய் ப்ரெஷ்னராக கூட பயன்படுத்தப்படுகிறது. தேநீரின் சுவையை அதிகரிக்க, ஏலக்காயை பொடித்து அதில் சேர்க்கும்ம் பழக்கத்தை பெரும்பாலான ஈடுகளிலும் காணலாம். இது செரிமானத்தை ஆதரிக்கிறது, கபத்தை கட்டுப்படுத்துகிறது மற்றும் வாதத்தை குறைக்கிறது.


இஞ்சி: ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் எப்போதும் இருக்கும் மிகவும் நன்கு அறியப்பட்ட மசாலாப் பொருட்களில் ஒன்றான இஞ்சி, ஆயுர்வேத சிகிச்சையின் முக்கிய பகுதியாகும். இது நச்சுக்களை நீக்குவதுடன், வயிற்றில் செரிமான திறனை அதிகரித்து, செரிமானத்திற்கு உதவுகிறது. உணவில் இஞ்சி சேர்ப்பதைத் தவிர, உணவுக்கு முன் சில துண்டுகள் பச்சை இஞ்சியை எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் ஊறவைத்தி எடுத்துக் கொள்ளலாம். மேலும் இஞ்சியை தேநீரில் சேர்க்கும் போது, மோசமான சளி அல்லது சைனஸ் தொற்றுக்கு ஒரு இயற்கை தீர்வாக அமைகிறது.


இலவங்கப்பட்டை: இலவங்கப்பட்டை ஆன்டிவைரல் பண்புகளைக் கொண்டுள்ளது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் வைரஸை எதிர்த்துப் போராட உதவுகிறது. தொண்டை புண் இருந்து நிவாரணம் வழங்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.


ALSO READ | Omicron: ஒமிக்ரானில் இருந்து காக்கும் ‘5’ எளிய ஆயுர்வேத நடைமுறைகள்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR