விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக,  சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கியுள்ள  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகாக்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம் மேற்கொண்ட இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் (வயது 61) ஆகியோர் ஜூன் மாதம் 5ம் தேதி கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்டு, ஜூன் மாதம் 6ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தனர். இவர்கள் இருவரும், ஜூன் 22ம் தேதி பூமிக்கு திரும்ப திட்டமிட்டு இருந்த நிலையில், தொழில் நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு வருவது  சிக்கலாகி வருகிறது.


இந்நிலையில், தற்போது சுனிதாவின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை நாசா  இன்னும் 16 நாட்களில் பத்திரமாக பூமிக்கு அழைத்து வர வேண்டும்.  விண்வெளியில் புவியீர்ப்பு விசை பூஜ்ஜியமாக இருக்கும் நிலையில், அதிக நாட்கள் விண்வெளியில் தங்கியிருப்பதால் பல தீவிர உடல் நல கோளாறுகள் ஏற்படும். இவர்கள் பத்திரமாக பூமிக்கு அழைத்து வரப்படும் நாளை உலகமே உற்று நோக்குகிறது. 


எலும்பு அடர்த்தி குறைவு


50 நாட்களுக்கும் மேலாக சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பல  உடல்நலச் சவால்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு அடர்த்தி குறைதல் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. ஏனெனில் விண்வெளியில் புவியீர்ப்பு விசை  இல்லாததால் தசைகள், எலும்புகளுக்கு எடையை தூக்கும் வேலை இருக்காது. அதனால், நாளடைவில் தசை நார் மற்றும் எலும்புகள் பலவீனமடைந்து உடையும் வாய்ப்பு உள்ளது. இந்த விண்வெளி வீரர்களை பத்திரமாக அழைத்து வந்து அவர்களின் உடல்நிலையை மேம்படுத்தும் மிகப்பெரிய சவாலை நாசா எதிர்கொள்கிறது. 


மேலும் படிக்க | எலும்புகள் வஜ்ரம் போல் வலுவாக... கால்சியம் - வைட்டமின் டி நிறைந்த சில சூப்பர் உணவுகள்


கண்கள் பாதிக்கப்படும் அபாயம் 


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 50 நாட்களுக்கும் மேலாக விண்வெளியில் சிக்கித் தவிக்கும் நிலையில், பார்வைக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். விண்வெளியில் அதிக நாள் தங்கி இருப்பதால் கண்களில் அழுத்தம் அதிகரித்து பார்வை மங்கும் வாய்ப்பு உள்ளது என்றும், இரட்டை பார்வை தோன்றும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். சரியான முறையில் சிகிச்சை எடுக்கப்படாவிட்டால், நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்தும் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.


அச்சப்படத் தேவையில்லை: இஸ்ரோ தலைவர்


இதனிடையே, நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும், அச்சப்படத் தேவையில்லை என்றும் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்துள்ளார். சுனிதா வில்லியம்ஸைத் தவிர, மேலும் எட்டு விண்வெளி வீரர்கள் இருப்பதாகவும், அவர்களில் பலர் நீண்ட காலமாக இருந்து வருவதாகவும் சோம்நாத் கூறினார்.


மேலும் படிக்க | Osteoporosis: 40+ வயதாகிவிட்டதா... மூட்டு வலி ஏற்படாமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியவை...!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ