எலும்புகள் வஜ்ரம் போல் வலுவாக... கால்சியம் - வைட்டமின் டி நிறைந்த சில சூப்பர் உணவுகள்

Food For Strong Bones: ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது. இல்லை என்றால் மூட்டு வலி நம் வாழ்க்கையை முடக்கி போட்டு விடும்.

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகள் அவசியம். இந்நிலையில், எலும்புகள் வலுவாக இருக்க உதவும் சில முக்கிய உணவுகளை அறிந்து கொள்ளலாம்.

 

1 /8

இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக, மூட்டு வலி என்பது பொதுவான பிரச்சனையாக ஆகிவிட்டது. இளம் வயதினருக்கு கூட ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோய் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க, கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை அவசியம் டயட்டில் சேர்க்க வேண்டும்.  

2 /8

பால்: வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த சிறந்த உணவுகளில் பால் முதலிடம் வகிக்கிறது. பாலில் தோராயமாக 300 mg கால்சியம் மற்றும் 100 IU வைட்டமின் D உள்ளது. எனவே, இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு தினமும் இரு வேளையும் பால அருந்துவது நல்லது.

3 /8

முட்டைகளில் புரதம் மட்டுமல்லாது வைட்டமின் டி சத்தும் நிறைந்துள்ளது. குறிப்பாக மஞ்சள் கருவில் சுமார் 40 IU வைட்டமின் டி உள்ளது. கால்சியம் நிறைந்த உணவுகளுடன் முட்டைகளை சேர்த்து சாப்பிடுவதன் மூலம் எலும்பு ஆரோக்கியத்திற்கான ஒட்டுமொத்த ஊட்டச்சத்து தேவையை நிவர்த்தி செய்ய உதவும்.  

4 /8

டோஃபு என்பது சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படுவது ஆகும்.  குறிப்பாக கால்சியம் சல்பேட்டுடன் தயாரிக்கப்படும் டோஃபு கால்சியம் மற்றும் வைட்டமின் D இன் சிறந்த தாவர அடிப்படையிலான ஆதாரமாக இருக்கும். அரை கப்  கால்சியம்-செறிவூட்டப்பட்ட டோஃபுவில், சுமார் 250 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. சைவ உணவு  உண்பவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும் .  

5 /8

ப்ரோபயோடிக் நிறைந்த தயிர் தினமும் சாப்பிடுவதால், கால்சியம் மட்டுமின்றி, வைட்டமின் Dயும் கிடைக்கும் . அதோடு செரிமானமும் சிறப்பாக இருக்கும். ஒரு கப் செறிவூட்டப்பட்ட தயிர் சுமார் 200 mg கால்சியம் மற்றும் 80 IU வைட்டமின் D சத்தினை வழங்குகிறது.   

6 /8

மீன் உணவுகள், குறிப்பாக சால்மன் மீன் ஒமேகா 3 ஆரோக்கிய கொடழுப்பு அமிலம் நிறைந்தது. ஒரு பிளேட் சர்வ் அளவிலான சால்மன் மீன் சாப்பிடுவதன் மூலம் சுமார் 570 IU வைட்டமின் D மற்றும் 200 mg கால்சியம் கிடைக்கும். 

7 /8

கீரை:  கீரை வகைகளில் கால்சியம் அதிகமாக உள்ளன.  அதிலும் கேல் கீரை மிகவும் ஊட்டச்ச்சத்து நிறைந்தது ஒரு கப் சமைத்த கேல் கீரையில் சுமார் 270 மில்லிகிராம் கால்சியம் உள்ளதாக உணவியல் வல்லுநர்கல் கூறுகின்றனர்.  இருப்பினும் இவற்றில் பொதுவாக வைட்டமின் டி ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கின்றன.  

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.