ரத்த உறைதலை தடுக்கும் உணவுகள்! இந்த பொருட்கள் இருதய பிரச்சனைகளைத் தடுக்கும்
Blood Thinner Food: இரத்தம் உறைவதை தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது இதய நோய்களை தவிர்க்க உதவும். ஏன் எப்படி என்று தெரியுமா?
இருதய நோய்களின் அபாயத்தைக் குறைப்பதற்கான ஒரு மிக முக்கியமான வழி, தமனிகளில் அடைப்பு ஏதும் ஏற்படாமல் இருப்பதாகும். உண்மையில், நமது தமனிகளில் அடைப்பு ஏற்படுவதற்கான காரணம், இரத்தம் உறைவது அதிகமாவது தான். உடல் முழுவதும் தமனிகளின் மூலம் செல்லும் ரத்தத்தின் அடர்த்தி வழக்கத்தைவிட அதிகமானால், கட்டிகளாக மாறும். இது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இரத்தம் உறைதல் என்பது அவசியமான செயலாகும், ஆனால் சில சமயங்களில் இரத்தம் அதிகமாக உறைந்து, இருதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
இயற்கையாக இரத்தத்தை மெலிதாக்கும் வழிகள்
தமனிகளில் அடைப்பு ஏற்படும் போது மாரடைப்பு பெரும்பாலும் ஏற்படுகிறது. இந்த அடைப்புகள் பெருந்தமனி தடிப்பு போன்ற பிற இருதய நோய்களையும் ஏற்படுத்தும். அத்தகைய அபாயங்களைக் குறைப்பதற்கும் இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்கும் வகையில் அடைப்புகளைத் தடுக்க இயற்கையான வழிகளை பின்பற்றலாம். எனவே இரத்தம் உறைவதை தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது அவசியம் ஆகும்.
மஞ்சள்
மஞ்சள் இரத்தத்தை மெலிதாக்கும் பண்புகளைக் கொண்டும். மஞ்சளில் உள்ள குர்குமின் ரத்தம் உறைவதை தடுக்கிறது. இதனால், இரத்த ஓட்டத்தில் ஏற்படும் அடைப்புகளைத் தடுக்க மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பூண்டு
சூப்பர்ஃபுட் என்று அழைக்கபப்டும் பூண்டு, இயற்கையாக இரத்தத்தை மெலிதாக்கும் உணவுப் பொருட்களின் பட்டியலில் இடம் பெறுகிறது. இரத்தக் கட்டிகளைத் தடுப்பதில் பூண்டு ஆஸ்பிரின் மாத்திரையைப் போல செயல்படுவதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. ஆனால், பூண்டு பற்களில் இருப்பதைவிட, பூண்டை நசுக்கினால் உருவாகும் ஒரு பொருளில் இருந்து ஒரு புதிய ஆன்டிகோகுலண்ட் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் படிக்க | தொங்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்போ இந்த கருப்பு உணவுகளை ட்ரை பண்ணுங்கள்
இஞ்சி
இஞ்சியில் உள்ள சாலிசிலேட் என்ற கூறு, கட்டிகள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது, இதனால் ரத்தம் உறைவதைத் தடுக்க இஞ்சி உதவுகிறது. இஞ்சியை தேவையான அளவு பயன்படுத்துவது என்பது, வேறு பல நோய்களையும் தடுக்க உதவுகிறது. அதோடு, உடல் இளைக்க இஞ்சி பயனுள்ளதாக இருக்கிறது. எனவே, இஞ்சியை போதுமான அளவு உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
மிளகு
இரத்தத்தை மெலிக்க பங்களிக்கும் உணவுகளில் மிளகு முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
கொழுப்பு அமிலங்கள் நம் உடலுக்கு தேவையானவை. கொழுப்பின் நல்ல வடிவமாக கருதபப்டும் ஒமேகா 3 வகை கொழுப்புகள், ரத்த உறைவு ஏற்படுவதைத் தடுக்கிறது. இது மாரடைப்பு ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.
சிவப்பு ஒயின்
அடைபட்ட தமனிகளைத் தடுக்கவும், இரத்தத்தை மெலிதாக்கவும் ஒயின் உதவும். இருப்பினும், மது அருந்துவது வேறு சில ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால், சிவப்பு ஒயினையும் குறைவாகவே அருந்த வேண்டும்.
இலவங்கப்பட்டை
இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் ஆற்றல் இலவங்கப்பட்டைக்கு உண்டு. இது மாரடைப்பு அபாயத்தை வெகுவாகக் குறைக்கும். எனவே, உணவில் போதுமான அளவு இலவங்கப்பட்டையை சேர்த்துக் கொள்ளவும்.
மேலும் படிக்க | தீவிர சைவ உணவு உண்பவரா? முட்டையைத் தவிர அதிக புரதச்சத்து கொண்ட உணவுகள் இவை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ