Breast Cancer: சுயமாக மார்பகங்களை பரிசோதனை செய்வதற்கான 5 எளிய வழிமுறை
நோய்களை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டால், குணப்படுத்துவது சுலபம். அதுமட்டுமல்ல, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான மனநிம்மதியும் கிடைக்கும்
புதுடெல்லி: வயதாகும்போது மார்பக புற்றுநோய்க்கான ஆபத்து அதிகரிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்பக புற்றுநோயால் கண்டறியப்பட்ட பெண்களில் சுமார் 80% பேர் 45 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் எனபது குறிப்பிடத்தக்கது.
40 முதல் 50 வயதுடைய பெண்களில், 69 பேரில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த ஆபத்தானது, 50 முதல் 60 வயது வரையிலான பெண்களுக்கு 43 இல் ஒருவர் அளவில் மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது.
நோய்களை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டால், குணப்படுத்துவது சுலபம். அதுமட்டுமல்ல, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான மனநிம்மதியும் கிடைக்கும்.
ALSO READ | ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரலாம்; 'இந்த' அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்
மார்பகத்தில் உள்ள உயிரணுக்களில் இருந்து உருவாகும் ஒரு வீரியம் மிக்க கட்டி மார்பக புற்றுநோய் என்று குறிப்பிடப்படுகிறது. மார்பக புற்றுநோய் பொதுவாக பால் உற்பத்தி செய்யும் சுரப்பிகளிள் மற்றும் குழாய்களின் பாதையில் ஏற்படுகிறது.
மார்பகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்து முலைக்காம்பு பாலை வெளியேற்றும் பாதைகளில் புற்றுநோய் செல்கள் தோன்றுகின்றன.
புற்றுநோய் ஒருவருக்கு இருக்கிறதா என்பதை சுலபமான பரிசோதனைகளின் தெரிந்துக் கொள்ளலாம். இது, புற்றுநோய் ஏற்பட்டால், அதை ஆரம்பக்கட்டத்திலேயே தெரிந்துக் கொள்ள உதவுகிறது.
மார்பகப் புற்றுநோய் என்பது பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் என்ற தவறான நம்பிக்கை உள்ளது. மார்பக புற்றுநோய் பிரச்சனை ஆண்களுக்கும் வரலாம். இத்தகைய பாதிபுகள் அரிதாகவே காணப்பட்டாலும், அதை முற்றிலுமாக புறக்கணிக்க முடியாது.
உங்கள் மார்பகங்களை கவனிக்கவும்
உங்கள் தோள்களை நேராகவும், உங்கள் கைகளை இடுப்பில் வைத்தும் கண்ணாடியில் உங்கள் மார்பகங்களைப் பார்ப்பதன் மூலம் தொடங்கவும்.
முன்பு இருந்த அதே அளவு, வடிவம் மற்றும் நிறத்தில் மார்பகங்கள் இருக்கிறதா என்பதையும், வீக்கம் இருக்கிறதா என்பதையும் கவனிக்கவும்.
இரண்டாவதாக, கைகளை உயர்த்தி மார்பின் பக்கவாட்டிலும் ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா என்பதை கவனமாக கவனிக்கவும்.
மூன்றாவதாக, இரு முலைக்காம்புகளிலிருந்து ஏதேனும் திரவம் கசிகிறதா என்பதை உன்னிப்பாக கவனிக்கவும்.
இரண்டு முலைக்காம்புகளிலிருந்தும் திரவம் கசிந்திருப்பதை கண்ணாடியில் பார்த்து உறுதி செய்ய நீர், பால் அல்லது மஞ்சள் திரவம் அல்லது ரத்தம் என திரவம் எந்த வடிவில் இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகவும்.
ALSO READ | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!
நான்காவதாக கீழே படுத்த நிலையில் உங்கள் மார்பகங்களை கவனியுங்கள். வலது கையை இடது மார்பகத்திலும், இடது கையை உங்கள் வலது மார்பகத்திலும் வைத்து உங்கள் மார்பகங்களை தடவிப் பார்க்கவும்.
மார்பகங்களை வட்ட வடிவில் விரல்களால் சுழற்றி, ஏதாவது கட்டியோ, மருவோ இருக்கிறதா என்று பார்க்கவும். இந்த நிலையில், மார்பகத்தில் வெவ்வேறு அளவுகளில் அழுத்தம் கொடுத்து பார்க்க வேண்டும்.
ஐந்தாவதாக, நிற்கும் போது உங்கள் மார்பகங்களை கவனியுங்கள். நின்று அல்லது உட்கார்ந்து, உங்கள் மார்பகங்களை கவனியுங்கள். பொதுவாக பெண்கள் குளிக்கும் போது இதை செய்யலாம்.
ALSO READ | COVID-19 தொற்றுக்கு ஒமிக்ரான் முடிவுரை எழுதுமா; UK பேராசிரியர் கூறுவது என்ன...!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR