ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரலாம்; 'இந்த' அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்..!!

மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் என்ற தவறான நம்பிக்கை உள்ளது.  ஆனால், அது முற்றிலும் தவறானது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 17, 2022, 11:38 AM IST
ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரலாம்; 'இந்த' அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்..!! title=

மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் என்ற தவறான நம்பிக்கை உள்ளது.  ஆனால், அது முற்றிலும் தவறானது. இந்தமார்பக புற்றுநோய் பிரச்சனை ஆண்களுக்கும்  வரலாம். இத்தகைய பாதிபுகள் அரிதாகவே காணப்படுகின்றன என்றாலும்அவற்றை புறக்கணிக்க முடியாது. சமீபத்தில் ஹரியானா மாநிலம் ஜாஜ்ஜரில் இருந்து வெளியான செய்தி அனைவரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.

ஹரியானாவில், 65 வயது முதியவருக்கு மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள்  இருந்துள்ளன. பொதுவாக மார்பக புற்றுநோய் அறிகுறிகள் உடலுக்குள் தோன்றும், ஆனால் முதன்முறையாக இத்தகைய அறிகுறிகள் ஒரு நபரின் உடலின் வெளிப்புற தோலில் தோன்றியுள்ளன. இது அனைவருக்கும் எச்சரிக்கை மணியாக கருதப்படுகிறது.

ALSO READ | பகீர் தகவல்! ஒரு நபர் தினமும் 320 பிளாஸ்டிக் துண்டுகளை உட்கொள்கிறார்..!!

பாதிக்கப்பட்ட ஆணின் மார்பின் இடது பகுதி மற்றும் இடது கையின் தோல் படிப்படியாக கடினமாகிவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். பாதிக்கப்பட்டவர் இது குறித்து கூறுகையில், இந்த அறிகுறிகள் அனைத்தும் 7 மாதங்களுக்கு முன்பு தோன்றியதாக கூறுகிறார். இந்த பிரச்சனை படிப்படியாக அதிகரித்தது, தோல் கடினமாக இருந்தாலும், அது அவருக்கு வலியை ஏற்படுத்தவில்லை. அதுமட்டுமின்றி, அவரது தோலில் தீக்காயங்கள் போன்ற அடையாளங்களும் உருவாகத் தொடங்கின.

அதை டாக்டர்கள் பரிசோதித்தபோது, ​​தோலில் எரித்மேட்டஸ் (Erythematous) மாட்யூல்கள், அதாவது திசுக்கள் கடினமாகி உலர்ந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது புற்றுநோயின் அறிகுறியாக இருந்தது. இந்த கடினமான திசுக்கள் மெதுவாக இரத்த அணுக்களை மூடி, அவற்றுக்கான இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் விநியோகத்தை துண்டித்துவிடும். இது நோயாளியின் உயிருக்கும் ஆபத்தாய் இருந்திருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். 

ALSO READ | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!

இதற்குப் பிறகு ஒரு பயாப்ஸி செய்யப்பட்ட பிறகு, நோயாளியின் உடலில் மெட்டாஸ்டேடிக் கார்சினோமா (Metastatic Carcinoma) இருப்பது தெளிவாகத் தெரிந்தது, அதாவது நோயாளிக்கு மார்பக புற்றுநோய் இருப்பது உறுதியானது. இது மருத்துவர்கள் எதிர்ப்பார்த்த முடிவு தான் என்பதால், அவர்களுக்கு இது வியப்பைத் தரவில்லை. இதுவரை மருத்துவர்கள் பார்த்த மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள் அனைத்தும் உடலுக்குள்தான் தோன்றிய நிலையில், முதல் முறையாக மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகளை உடலுக்கு வெளியே பார்த்தார். அதன் பிறகு, நோயாளிக்கு சிகிச்சை தொடங்கியது, அது இன்னும் தொடர்கிறது.

ALSO READ | COVID-19 தொற்றுக்கு ஒமிக்ரான் முடிவுரை எழுதுமா; UK பேராசிரியர் கூறுவது என்ன...!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News