நீரிழிவு நோயாளிகள் நிச்சயமாக தவிர்க்க வேண்டிய ‘சில’ பழங்கள்!
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கமான உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களுடன் சீரான உணவைக் உட்கொள்வது மிகவும் முக்கியம்.
நீரிழிவு நோயில் இந்த பழங்களைத் தவிர்க்கவும்: பழங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்பட்டாலும், பல பழங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மைகளுக்குப் பதிலாக தீங்கு விளைவிக்கும், ஏனெனில் இவை சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கமான உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களுடன் சீரான உணவு பழக்கத்தை கொண்டிருப்பது முக்கியம். சரிவிகித உணவைப் பொறுத்தவரை, பழங்கள் அதில் ஒரு முக்கிய அங்கமாகும். இருப்பினும், சில பழங்களை உட்கொள்ளும்போது நீரிழிவு நோயாளிகளுக்கு 'விஷம்' ஆகலாம். நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாத பழங்கள் எவை என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய ‘சில’ பழங்கள்:
1. அன்னாசி (Pinapple)
அன்னாசிப்பழத்தின் இனிப்பு சுவை பலரைக் கவர்ந்தாலும், அதில் உள்ள அதிக சர்க்கரைச் சத்து, நீரிழிவு நோயாளிகளுக்கு எதிரியாக செயல்படும். இதை ஒருபோதும் சாப்பிட வேண்டாம். இதனை எடுத்துக் கொண்டால், இரத்த குளுக்கோஸ் அளவு திடீரென அதிகரிக்கும்.
2. தர்பூசணி (watermelon)
தர்பூசணி நீர்சத்து அதிகம் உள்ள மற்றும் சுவையான பழ. ஆனால், இதில் அதிக சர்க்கரை உள்ளடக்கம் மற்றும் அதிக கிளைசெமிக் குறியீட்டு மதிப்பெண் (76) உள்ளது. அதனால்தான் நீரிழிவு நோயாளிகள் தர்பூசணி எடுத்துக் கொள்வதைக் குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இல்லையெனில் இரத்த சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும்.
மேலும் படிக்க | உடல் பருமன் குறைய.. காலை உணவில் சேர்க்க வேண்டியதும்... சேர்க்க கூடாததும்..!
3. மாம்பழம் (Mango)
மாம்பழம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பிரபலமான ஒரு பழமாகும், முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்திற்காக மக்கள் கடுமையான கோடைகாலத்தை கூட வரவேற்று காத்திருக்கிறார்கள். ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது நல்லதல்ல, ஏனெனில் இது சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கிறது.
4. வாழைப்பழம் (Banana)
வாழைப்பழம் எல்லா காலங்களிலும் கிடைக்கும் ஒரு பழமாகும், மேலும் இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது, ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது நல்லதல்ல. ஏனெனில் இதன் கிளைசெமிக் குறியீட்டு மதிப்பெண் (62), இது நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
5. லிச்சி (Litchi)
சிலருக்கு லிச்சி சாப்பிடுவது மிகவும் பிடிக்கும், ஆனால் அதில் 16 கிராம் சர்க்கரை உள்ளது, எனவே நீரிழிவு நோயாளிகள் அதிலிருந்து விலகி இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த, குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ள பொருட்களை உட்கொள்வது நன்மை பயக்கும். அவை இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கின்றன. நீரிழிவு நோயாளிகள் நாவல் பழம், கொய்யாப்பழம், திராட்சை, ஆப்பிள் போன்ற பழங்களை கவலை இன்றி எடுத்துக் கொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், திடீரென எடை குறைதல், பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட தொடங்கும். கோடை காலத்தில் பாதிப்புகள் இன்னும் அதிகமாக இருக்கும். சர்க்கரை அதிகமானால் உடல் உறுப்புகளை பாதிப்பதோடு, சில சமயங்களில் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Dementia: இளம் வயதினருக்கும் மறதி நோய் வருமா? ஷாக் காெடுக்கும் சமீபத்திய சர்வே..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ