வீட்டில் தயாரிக்கப்படும் நெய் பலருக்கும் பிடித்தமான ஒன்று, சிலருக்கு இது பிடிக்கும் சிலருக்கு இது பிடிக்காது.  இந்திய உணவுகளில் பெரும்பாலான இனிப்பு பதார்த்தங்கள் மற்றும் சில உணவுகளில் நெய் சேர்க்கப்படுகிறது.  நெய்யில் அதிகளவு வைட்டமின்கள், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் நிரம்பியுள்ளன.  பாலிவுட் நடிகைகளான ஷில்பா ஷெட்டி மற்றும் ரகுல் ப்ரீத் இருவரும் தினசரி உணவில் நெய் சேர்த்துக்கொள்வார்களாம்.  இயற்கையான மூலத்திலிருந்து பெறப்படும் நெய்யானது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது, ஆனால் இந்த நெய்யை சிலர் அதிகம் சேர்த்துக்கொள்ளக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.  அவரவர் உடலுக்கு ஏற்ப சில உணவுகள் ஒத்துப்போகும்,சில உணவுகள் ஒத்துப்போகாது, அதைப்போல தான் நெய்யும், இப்போது யாரெல்லாம் நெய் சாப்பிடக்கூடாது என்பது பற்றி இங்கே பார்ப்போம்.  நெய் ஒரு பால் சம்மந்தப்பட்ட பொருள் என்பது நாம் அனைவருக்கும் நன்றாக தெரிந்த ஒன்று, பாலினால் ஒவ்வாமை ஏற்படும் எவரும் நெய்யை ஒருபோதும் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க 7 வழிகள்


அத்தகையோருக்கு நெய் சாப்பிட்டால் சொறி, படை, வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தோன்றும்.  பால் ஒவ்வாமை அல்லது லாக்டோஸ் அலர்ஜி இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.  நெய்யில் உள்ள கொழுப்புக்கள் இதய ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லதல்ல, இதய சம்மந்தமான பிரச்சனை உள்ளவர்கள் இதுபோன்ற கொழுப்பு அமிலங்களை அதிகமாக உட்கொள்ளும்போது மாரடைப்பு கூட ஏற்படலாம்.  பெரும்பாலும் நெய் சாப்பிடுவதால் கல்லீரலில் பாதிப்புகள் ஏற்படுத்துவதாக இதுவரை மருத்துவர்கள் கண்டறியவில்லை, ஆனால் ஏற்கனவே கல்லீரல் தொடர்பான பாதிப்பு கொண்டவர்கள் நெய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.  உதாரணமாக மஞ்சள் காமாளை, கல்லீரலில் கொழுப்பு மற்றும் இரைப்பை குடல் வலி போன்றவை இருந்தால் நெய்யை தவிர்க்கலாம்.


நெய்யில் கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் உடல் பருமனானவர்கள் இதனை தவிர்க்க வேண்டும், உடல் எடை குறைக்க டயட்டில் நெய் எடுத்துக்கொள்பவராக இருந்தால் அதிகபட்சம் இரண்டு ஸ்பூன்களுக்கு மேல் சாப்பிடக்கூடாது.  நெய்யில் உள்ள கான்ஜுகேட்டட் லினோலிக் அமிலம் உடல் எடையை குறைக்க உதவுகிறது, ஆனால் உடல் பருமனாக இருப்பவர்கள் இது அதிக கலோரி கொண்டிருப்பதால் சரியான பரிந்துரை இல்லாமல் இதனை உட்கொள்ளக்கூடாது.  மேலும் செரிமான கோளாறு இருக்கும் கர்ப்பிணிகள் நெய் சாப்பிடுவதை தவிர்க்கலாம், ஏனெனில் நெய் செரிமாணமடைய நேரம் எடுத்துக்கொள்ளும் அதனால் கர்ப்பிணி பெண்கள் நெய் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.


மேலும் படிக்க | Anemia: மாதுளை - பீட்ரூட் மட்டுல்ல; இதுவும் ரத்த சோகையை குணப்படுத்தும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ