திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் அல்லது அலாதி பிரியத்துடன் இருப்பவர்களை உடலுறவு, அவர்களுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துகிறது. ஆனால், உடலுறவு இனிமையாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு இடையிலான ஆரோக்கியான உறவு இனிமையானதாக தொடரும். அதில் ஏதேனும் விருப்பமின்மை அல்லது ஆசையை நிறைவேற்ற தவறும்பட்சத்தில் இருவருக்கும் இடையிலான சுமூக உறவு கடுமையாக பாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விரைவில் திருமணம் செய்ய உள்ளவர்கள், நெருக்கமானவர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள இருப்பவர்கள் இதுகுறித்த சில விஷயங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பாலியல் வாழ்க்கை ஆரோக்கியமாக இல்லையென்றால், உங்களிடையே அதிக விரக்தி, வெறுமை மற்றும் மனச்சோர்வுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதால், அது குறித்த சில அடிப்படையான விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். உடலுறவு என்பது ஒன்றும் ஒதுக்கப்பட வேண்டியது அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


பாலியல் உறவு இனிமையானதாக இருக்க நீங்கள் செய்ய வேண்டிய அடிப்படையான விஷயங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். பல விஷயங்கள் இருப்பினும், அவற்றில் உணவில் கவனம் செலுத்த வேண்டிய 3 விஷயங்களை தெரிந்து கொள்வோம். 


மேலும் படிக்க | நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்: எப்போது சாப்பிட்டால் அதிகப்படியான பலன் கிடைக்கும்


1. நொறுக்குத் தீனி


இன்றைய காலக்கட்டத்தில் பலர் நொறுக்குத் தீனிகளில் அதிக நாட்டம் கொண்டுள்ளனர். ஜங்க் ஃபுட்களை முதலில் ஆர்வத்துடன் சாப்பிட்டுவிட்டு பிறகு அது ஒரு பழக்கமாகி விடுகிறது. ஜங்க் ஃபுட் சாப்பிடுவதால் கார்போஹைட்ரேட், டிரான்ஸ் ஃபேட்ஸ் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்புகள் உடலில் சேரும். இதனால் இரத்த ஓட்டம் மிகவும் மெதுவாக செல்லும். அதனால்  நெருக்கத்தின்போது  உங்களால் சிறப்பாக செயல்பட முடியாது.


2. அதிகப்படியான பதட்டம்


இப்போதெல்லாம், பலர் கவலைப்படுகிறார்கள். ஆனால் அது உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பதை என்றாவது யோசித்திருக்கிறீர்களா?. இது உங்கள் பாலியல் வாழ்க்கையையும் சீர்குலைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மன அழுத்தம் உடலுறவுக்கான விருப்பத்தை பலவீனப்படுத்துகிறது. 


3. குறைந்த உப்பு 


சிலருக்கு உணவில் உப்பை அதிகம் சேர்த்துக்கொள்ளும் பழக்கம் இருக்கும். ஆனால் இந்த பழக்கம் உங்கள் பாலியல் வாழ்க்கையை பாதிக்கும். அதிகப்படியான உப்பு உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது, இது லிபிடோவைக் குறைக்கிறது. பாலியல் வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், உப்பு அதிகமாக உட்கொள்வதை தவிர்த்துவிட வேண்டும்.


இவற்றை கடைபிடிப்பது மட்டுமே பாலியல் வாழ்க்கையை இன்பகரமானதாக மாற்றிவிடாது. இன்னும் சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் இந்த விஷயங்களையும் நீங்கள் கடைபிடிக்க வேண்டும். 


மேலும் படிக்க | Uric Acid அதிகரிப்பதால் பிரச்சனையா: இந்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR