பலாப்பழம் விரும்பாதவர்கள் பெரும்பாலும் கிடையாது. அனைவருமே பலா பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள் அவ்வளவு இனிப்பான சுவையான பழமாக பலாப்பழம் திகழ்கிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த பழத்தை உட்கொண்ட பிறகு மறந்து கூட சில உணவுகளை நீங்கள் எடுகிக்கொள்ள கூடாது. அப்படி எடுக்கொண்டால் அவை உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும் விஷயங்கள் என்னவென்று தெரிந்துகொள்ள முயற்சிப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பால் ஒருபோதும் உட்கொள்ளக்கூடாது
பலாப்பழம் சாப்பிட்டவுடன், சிலர் இரவில் பால் குடிப்பார்கள், ஆனால் அத்தகையவர்கள் இதுபோன்ற தவறை செய்யக்கூடாது, ஏனெனில் இது உங்கள் ஆரோக்கியத்தை தீங்கு விளைவிக்கும். இது தோல் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். உங்களுக்கு பருக்கள் வரலாம், அலர்ஜி ஆகலாம். எனவே தவறை செய்யாமல் இருப்பது நல்லது.


மேலும் படிக்க | Health Care Tips: இரவில் சாதம் சாப்பிடுவது நல்லதா, கெட்டதா 


பலாப்பழத்திற்குப் பிறகு தேன் சாப்பிட வேண்டாம்
பலாப்பழம் சாப்பிட்ட பிறகு தேன் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் சுவையான தேன் உடலுக்கு பற்பல ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடியது. சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தலாம். பலாப்பழத்திற்குப் பிறகு தேன் சாப்பிடக்கூடாது, இது உங்கள் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும். ஆனால் தேனில் ஊறிய பலா மிகவும் சுவையாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் என்ற குழப்பம் வருகிறதா? அது சர்க்கரை நோய் என்ற நீரிழிவு நோய் வராத காலத்தில் சொன்ன உணவுக் குறிப்பு. இன்றைய காலகட்டத்தில் அது சரியாக வராது. தேன் மற்றும் பலாப்பழம் இரண்டுமே இனிப்புச்சுவை கொண்டவை. இரண்டையும் ஒன்றாக சேர்த்து உண்பதால் அது எதிர்விளைவை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.


பப்பாளி சாப்பிடக்கூடாது
பப்பாளி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால், பலாப்பழம் சாப்பிட்ட பிறகு அதை உட்கொண்டால், அது உங்கள் உடலில் அழற்சியை ஏற்படுத்தும். எனவே, பலாவை சுவைத்த பிறகு குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்து பப்பாளியை சாப்பிடலாம்.  


வெண்டைக்காய் சாப்பிடவேண்டாம்
பலாவை காயாக சமைத்து சாப்பிடும்போது, அதனுடன் வேறு எந்த காய்கறியையும் சாப்பிடலாம். ஆனால், வெண்டைக்காயை மட்டும் சாப்பிடவேண்டாம். பலாப்பழத்துடன் வெண்டைக்காயை உட்கொண்டால், சருமப் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தோலில் வெண் திட்டுகள் தோன்றும்.


பலாப்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்


* பலாப்பழத்தை அளவுக்கு அதிகமாக உடகொண்டால் வயிறு மந்தமாகி வயிற்று வலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும்.
* பலாபழ விதைகள் சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும் மலச்சிக்கல், கள்ளு குடிப்பவர்களுக்கு உண்டாவது போன்ற புளியேப்பம், கல் போல் வயிறு கட்டிப்போவது, வயிற்றுவலி போன்றவற்றை உண்டாக்கும்.
* பலா பிஞ்சினை அதிகமாய் உணபதால் செரியாமை, வயிற்று வலி போன்றவை ஏற்படுவதுடன் சொறி, சிரங்கு, கரப்பான், இருமல், இரைப்பு,  வாத நோய்கள் ஏற்படும்.
* பலா பிஞ்சினை அதிக அளவில் உண்பதால் செரியாமை வயிற்றுவலி போன்றவை ஏற்படும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தலவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | High cholesterol இருந்தால் என்ன ஆகும்; அறிகுறிகள் மற்றும் காரணங்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR