ஊட்டச்சத்துக்கள் மிகுந்த பல மூலிகைகளின் நற்பண்புகள் நமக்குத் தெரிவதில்லை. அந்தவகையில் கற்பூரவல்லி அல்லது ஓமவல்லியின் முழுப் பயன்களும் பலருக்குத் தெரிவதில்லை. வைட்டமின் C, A, B6 சத்துக்கள், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், கால்சியம் என பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ள ஓமவல்லி. இருமல், சளி, ஜலதோஷம், நெஞ்சுச்சளி, தொண்டைப்புண், காய்ச்சல் என பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெறும் வாயில் மென்று தின்று வெந்நீர் குடிக்கலாம் அல்லது சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிடுவது வழக்கம். சிலர், இதை வழக்கமான உணவுப் பொருளைப் போன்று பயன்படுத்துவார்கள். எப்படி எடுத்துக் கொண்டாலும், ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஓமவல்லியை பயன்படுத்தும் சில முறைகளை தெரிந்துக் கொள்வோம்.


வெறும் வாயில் மென்று குடிக்கலாம்.


ஓமவல்லி சாறு


வைட்டமின் C, A, B6 என பல சத்துக்கள் நிறைந்த இந்த கற்பூரவல்லியை சாறு எடுத்துக் கொண்டு அதில் தேன் கலந்து பருகலாம்.


சமையலில் ஓமவல்லி


சமையலில் ஓமவல்லியை பஜ்ஜியாகவும், ரசமாகவும், தேநீராகவும் சமைத்து உண்ணலாம்


பஜ்ஜி


கடலைமாவில் தோய்த்து பஜ்ஜியாக செய்து சாப்பிடலாம்.


மேலும் படிக்க | வயசான காலத்தில் எலும்புகள் வலுவாக இருக்க வேண்டுமா? அப்போ இதைசெய்யுங்க..


ஓமவல்லி ரசம்


ஓமவல்லி இலைகளை சுத்தப்படுத்தி எடுத்துக் கொண்டு அதை சுத்தப்படுத்தவும். தனியா, மிளகு, சீரகம், கடலைப் பருப்பு, எலுமிச்சை அளவு புளி, 3 பூண்டுப் பற்கள், இரு பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் 1, சிறிதளவு மஞ்சள்தூள் எடுத்துக் கொள்ளவும். தாளிக்க, நல்லெண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மல்லித்தழை, எடுத்துக் கொள்ளவும். ரசத்திற்கு தேவையான அளவு உப்பும் எடுத்துக் கொள்ளவும்.


தனியா, மிளகு, சீரகம், கடலைப் பருப்பு அனைத்தையும் வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். புளியை நீரில் ஊற வைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயுடன் ஓமவல்லி, பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். புளித்தண்ணீரில் உப்பு மஞ்சள் அரைத்து வைத்த சீரகப் பொடியை சேர்த்து அடுப்பில் ஏற்றவும். ரசம் நுரை பொங்கிவரும்போது அரைத்து வைத்த ஓமவல்லில் கலவையை சேர்த்து இறக்கவும். நல்லெண்ணெயில் கடுகு பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, ரசத்தில் சேர்க்கவும். மேலே மல்லித்தழையை சேர்த்தால், தொண்டைக்கு இதம் தரும் ஓமவல்லி ரசம் தயார்


சிலருக்கு நெஞ்சு சளி அதிகம் இருக்கும்போதும் மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு ஓமவல்லி ரசம் நல்ல பலன் தரும். 


ஓமவல்லி தேநீர்


ஓமவல்லி இலையையும், துளசியையும் சேர்த்து கொதிக்கவைத்து தேன் கலந்து தேநீராக பருகினால்,   சளித்தொல்லைக்கு நல்லது.


கற்பூரவள்ளி இலையின் நன்மைகள் என்ன?


பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படுகிறது, பூஞ்ஜைகளுக்கு எதிராக செயல்படுகிறது. வைரஸ்களை எதிர்க்கும் தன்மை கொண்டது ஓமவல்லி. சுவாச பிரச்னைகளை தீர்க்கும் வல்லமை கொண்ட கற்பூரவல்லியில், ஆன்டி-ஆக்ஸிடன்ட் உட்பொருட்கள் உள்ளது.


காயங்களை ஆற்றும் தன்மை கொண்ட ஓமவல்லி, அழற்சிக்கு எதிரானது. பற்களில் ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பது, தலைமுடி வளர்ச்சி மற்றும் சருமத்தின் பொலிவை மேம்படுத்தும் குணத்தையும் கொண்டது.


(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Hair Removal: அழகிற்கு மெருகூட்டும் வீட்டு வைத்தியங்கள்! இது நமக்கு நாமே DIY திட்டம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ