கொலஸ்ட்ரால் குறையணுமா? ஆனந்தமா ஆப்பிள் சாப்பிடுங்க போதும்
Apple for Cholesterol: உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க ஆப்பிள் சாப்பிடுவது சிறந்த வழியாக இருக்கும்.
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஆப்பிள்: உங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், அது அபாய மணியாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இதன் காரணமாக, மாரடைப்பு போன்ற கொடிய நோய்களின் பயம் எழுகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கும் கொலஸ்ட்ரால் தொடர்பான பிரச்சனை இருந்தால், அதற்கான சில உணவுகளை கொண்டு இந்த பிரச்சனையை சரி செய்யலாம். அதில் ஆப்பிள் ஒரு மிகச்சிறந்த வழியாகும். ஆம், ஆப்பிளை உணவில் சேர்த்துக்கொண்டால் கொலஸ்ட்ரால் பிரச்சனையில் தீர்வு கிடைக்கும். இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஆப்பிள் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையும்
உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க ஆப்பிள் சாப்பிடுவது சிறந்த வழியாக இருக்கும். ஆப்பிளில் காணப்படும் பெக்டின் ஃபைபர் எல்டிஎல் அதாவது கெட்ட கொழுப்பைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
ஆப்பிள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு ஏன் நல்லது?
ஆப்பிள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆகையால் இது எடையைக் குறைக்கவும், செரிமானத்தை சிறப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. இந்தப் பழத்தில் உள்ள பாலிஃபீனால் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கிறதா... இதையெல்லாம் செய்யாதீர்கள்!
ஆப்பிளை எப்போது, எப்படி சாப்பிடுவது?
கெட்ட கொலஸ்ட்ராலில் இருந்து விடுபட, தினமும் காலையில் எழுந்தவுடன் ஆப்பிள் சாப்பிடுங்கள்.
ஆப்பிள் பழத்தின் முக்கிய நன்மைகள்:
- உடல் எடையை குறைக்க உதவும்.
- செரிமானத்திற்கு உதவும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகள்
ஆப்பிளில் அதிக ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் ரத்த சர்க்கரை அளவை பாதிக்கலாம். நீரிழிவு நோய் இருப்பவர்கள் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு ஆப்பிளில் 27 கிராம் கார்போஹைட்ரேட்டுகள், 4.8 கிராம் நார்ச்சத்துக்களும் உள்ளது. ஆப்பிளில் காணப்படும் சர்க்கரையின் பெரும்பகுதி பிரக்டோஸ் ஆகவுள்ளது. ஆப்பிளை தினமும் சாப்பிடுவதன் மூலம் உடலிலுள்ள இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கும் ஆற்றல் அதிகரிக்கிறது. ஆப்பிளில் உள்ள சில ஃபிளாவனாய்டுகள் கார்ப் செரிமானத்தை குறைப்பதன் மூலம் இரத்த குளுக்கோஸ் அளவை மேம்படுத்த உதவுகின்றன. 339,383 நபர்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் டைப் 2 வகை நீரிழிவு அபாயம் குறைவாக இருப்பது கணடறியப்பட்டுள்ளது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் எடையை வேகமாக குறைக்கனுமா? தினமும் இரவு உணவில் இதை சாப்பிட்டுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ