Habits and Foods That Affects Immunity: ஆரோக்கியமான உடலுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி தேவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. நமது உடலில் தேவையில்லாதவற்றை நிராகரித்து வெளியேற்றும் திறன் தான் நோய் எதிர்ப்பு சக்தி. குறிப்பாக பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பிற நோய் தொற்று நோய் கிருமிகளை அடையாளம் கண்டு, அவற்றை உடலில் இருந்து வெளியேற்றி நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்பாக இருந்தால்  மட்டுமே உடல் நோய்களை எதிர்த்துப் போராட முடியும். அதோடு, நோய்வாய்ப்பட்டாகலும், விரைவாக குணமாக முடியும். அதனால் தான் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவர்கள்  நோய்வாய்ப்படுவது மிகவும் அரிதாகவே இருக்கிறது. எனவே,  நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் செயல்களை தவிர்த்து, ஆரோக்கியமான பழக்கத்தை கடைபிடித்து வந்தால், நோய்களை எதிர்த்துப் போராடும் உங்கள் உடலின் வலிமை (Health Tips) சிறப்பாக இருக்கும்.


துரித உணவுகள்


உணவு பழக்கம் நோய் எதிர்ப்பு சக்தியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, நொறுக்குத் தீனிகள், சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொண்டால் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். என்றாவது ஒரு நாள், மாதத்திற்கு ஒரு முறை சாப்பிடுவதில், தவறு ஏதும் இல்லை. ஆனால், இதனை வழக்கமாக கொள்வது, உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு.


உடல் செயல்பாடு இல்லாமை


இன்றைய காலகட்டத்தில் உடல் உழைப்பு இல்லாதது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. வழக்கமான உடற்பயிற்சி செய்வதன் மூலம்  உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது. எனவே, வாரத்தில் ஐந்து நாட்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.


மேலும் படிக்க | வாட்டி எடுக்கும் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட... சில வீட்டு வைத்தியங்கள்


தூக்கமின்மை


நாம் ஆழ்ந்து தூங்கும்போது, ​​உடல் நோய்த்தொற்றை எதிர்த்துப் போராட ஆன்டிபாடிகள் மற்றும் சைட்டோகைன்களை உற்பத்தி செய்கிறது.  எனவே, போதுமான தூக்கம் இல்லை என்றால்ல, அவற்றின் அளவு குறைகிறது. இதன் காரணமாக நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. அதோடு, தூக்கமின்மை நோய் எதிர்ப்பு சக்தியையும் பலவீனப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மன ஆரோக்கியத்தையும் காலி செய்கிறது. 


புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல்


புகைபிடித்தல் மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் நோய் எதிர்ப்பு சக்திக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்ல, மூளை ஆரோக்கியம் முதல், இதயம், கல்லீரல் என அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது. இந்த பழக்கங்கள் உங்கள் உடல்நலப் பிரச்சனைகளை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | காலையில் எழுந்ததும் வயிற்றெரிச்சல் தொந்தரவு செய்கிறதா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ