பேக்கிங் சோடா என்பது லேசான உப்புச்சுவையையும் மற்றும் கசப்புச்சுவையையும் கொண்டுள்ளது. பல வகைகளில் பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். இது ரொட்டி சோடா, சமையல் சோடா மற்றும் சோடாவின் பை கார்பனேட்டு எனப் பல பெயர்களில் இடத்திற்கு தகுந்தவாறு அழைக்கப்படுகிறது. காய்கறிகளை சமைக்கும் போது  (Cooking Soda) கூட அவற்றை மிருதுவாக்க பேக்கிங் சோடா பயன்படுத்தப்படுகிறது. இங்கே நாம் பேக்கிங் சோடா பயன்கள், பக்க விளைவுகள் என்னவென்று பார்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேக்கிங் சோடா பயன்கள்
* முக ஸ்க்ரப் ஆக செயல்படுகிறது: முகத்தை நன்கு கழுவிக்கொண்டு, ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் (Baking Soda) இரண்டு ஸ்பூன் ஆரஞ்சு சாரை புழிந்து கலந்து கொள்ளுங்கள். இதை உங்கள் முகத்தில் பூசிக்கொண்டு மிதமாக மசாஜ் செயுங்கள். 20 நிமிடம் ஆனதும் முகத்தை கழுவிடலாம். இதை வாரம் ஒரு முறை பயன்படுத்தினால் முகம் இயல்பாகவே ஜொலிக்க ஆரம்பிக்கும்


ALSO READ | தினம் ஒரு குவளை தக்காளி சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?


* முகப்பருவை அகற்றும்: ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்துக்கொண்டு அதில் அதே அளவிற்கு தண்ணீரை கலந்து உங்கள் பருக்கள் கொண்ட சருமத்தில் பூசுங்கள். இதை 15 நிமிடம் கழித்து சற்று வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுங்கள். அக்னே போன்ற  சரும பிரெச்சனைகளில் இருந்து விடுபெறலாம். 


* சருமம் பிரகாசிக்கும்: ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிது ஒலிவ் எண்ணையை கலந்து சிறிது திராட்சைப்பழம் சாறை கலக்கவும் . இந்த கலவையை உங்கள் முகத்தில் சிறிது நேரம் வைத்துவிட்டு முகத்தை கழுவிடுங்கள் .உங்கள் சருமத்தை எளிதில் ஜொலிக்க வைக்கும்.


* மென்மையான வெடிப்பில்லாத பாதம்: பாதத்தை மிக எளிதில் வெடிப்பில் இருந்து காப்பாத்த பேக்கிங் சோடாவை உபயோகியுங்கள் . ஒரு சிறு டப்பில் வெதுவெதுப்பான நீரில் சிறிது பேக்கிங் சோடாவை கலந்து உங்கள் கால்களை அரை மணி நேரம்  ஊற வைத்து கழுவி வரவும். 


* உடல் துர்நாற்றத்தை குறைக்க : ஒரு ஸ்பிரே பாட்டிலில் சிறிது பேக்கிங் சோடா, எலுமிச்சை  இரண்டையும் கலந்து ஒரு பேஸ்ட் ஆக்கிக்கொள்ளுங்கள். இதை துர்நாற்றம் வரும் இடங்களில் குளிக்கும் முன்பதாக அடித்துக்கொண்டு சிறிது நேரம் கழித்து குளிக்க செல்லுங்கள்.


பேக்கிங்  சோடாவால் ஏற்படும்  பக்க விளைவுகள்
* பற்களை சுத்தப்படுத்த பயன்படுத்தும் போது, அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது, பல் எனாமலை அரித்துவிடும்.
* கேக் , பிரட், பிஸ்கட் செய்ய பேக்கிங் சோடா பயன்படுத்தும் போது அதிகம் சோடியம் இருப்பதால் வாந்தி, பேதி போன்ற தொந்தரவுகளும் வரலாம்.
* பேக்கிங் சோடா பல தோல் சம்பந்த பட்ட பிரச்சனைகளில் தீர்வாக இருந்தாலும் இதை உணர்திறன் கொண்ட சருமத்தில் உபயோகிக்க முடியாது ஏனெனில் சருமம் சிவந்து,தடிப்புகள் உடன் எரிச்சலை உண்டாக்கலாம் 
* சிலருக்கு பேக்கிங் சோடா பயன்படுத்தினால் சருமம் சிவந்து, தடிப்புகள் உடன் எரிச்சலை உண்டாக்கலாம் சருமம் மிகவும் வறண்டு போய்விடும்.


ALSO READ | Home Remedies: வயிற்றில் வீக்கமா? வீட்டு வைத்தியம் அறிந்து கொள்ளுங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR