பாலும் பழமும் என்ற சொல்லில் பழம் என்பது வாழைப்பழத்தையே அதிகமாக சொல்வார்கள். ஆனால் இந்த இரண்டும் ஒன்றாக கலந்தால் உடல்நலத்திற்கு கேடு தரும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது வாழைப்பழத்தையும், பாலையும் ஒன்றாகக் கலந்து சாப்பிடுவது வளர்ச்சிதை மாற்றத்தில் பாதிப்பை உண்டாக்கும் என புதிய ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது. ஜிம் பயிற்சியாளர்கள் பெரும்பாலும் ஒல்லியானவர்கள் தங்கள் உணவில் வாழைப்பழ மில்க் ஷேக்கை சேர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்கள். கோடையில், பெரும்பாலான மக்கள் மற்ற ஷேக்கை விட இதை விரும்புகிறார்கள். ஆனால் வாழைப்பழத்தையும் பாலையும் ஒன்றாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்பது சிலருக்குத் தெரியாது. எனவே வாழைப்பழத்தையும் பாலையும் ஒன்றாக எடுத்துக்கொள்வது எப்படி ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்பதாய் இங்கே தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாழைப்பழ மில்க் ஷேக் மூளையில் மோசமான விளைவை ஏற்படுத்தும்
உலகில் உள்ள நோய்களை வேரிலிருந்தே அகற்றுவதற்கான சிகிச்சையை தரும் ஆயுர்வேதம் நமது இந்தியாவின் மிக சக்திவாய்ந்த ஆயுதம். அவர் கூறுகையில், வாழைப்பழத்தில் நார்ச்சத்து உள்ளது, பாலில் கால்சியத்தின் அளவு அதிகமாக உள்ளது. அதனால் வாழைப்பழத்தையும் பாலையும் ஒன்றாக உட்கொள்ள முடியாது. அதன் நுகர்வு ஹார்மோன்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இது மூளையில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.


மேலும் படிக்க | Monkeypox: இவைதான் குரங்கு அம்மையின் முக்கிய அறிகுறிகள்


ஆயுர்வேதம் என்ன சொல்கிறது 
ஆயுர்வேதம் திரவம் கலந்த எந்த உணவையும் உட்கொள்வதை தடை செய்கிறது. ஆயுர்வேதத்தின்படி, வாழைப்பழமும் பாலும் அத்தகைய கலவையாகும். இதனால் உடலின் ஹார்மோன்கள் பாதிக்கப்படுகின்றன. இதை சாப்பிடுவதால் உடலில் பல நோய்களை வரவழைக்கும். 


கர்ப்பிணிப் பெண்களும் பாதிக்கப்படலாம்
கருத்தரித்த பிறகு, பெண்கள் தங்கள் குழந்தையை நன்றாகப் பாதுகாக்க சில பொருட்களை உட்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் மற்றும் சாப்பிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும், குழந்தைகளை நன்றாகப் பராமரிக்க பால் மற்றும் வாழைப்பழங்களை உட்கொள்ளக்கூடாது. இதனை உட்கொள்வதால் உடலில் உள்ள நச்சுகளின் அளவு அதிகரிக்கும். இது ஒவ்வாமையுடன் பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். இதன் காரணமாக குழந்தையின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.


அலர்ஜி ஏற்படலாம்
வாழைப்பழம், பால் இரண்டையும் ஒன்றாகச் சாப்பிடும் போது தேவையற்ற நச்சு அமிலங்களை வெளியிடுகின்றன. இதனால் அது அலர்ஜியாக மாறி தொற்று, வயிற்றுக் கோளாறு, வாந்தி போன்றவை உண்டாகும். மேலும் இந்த கலவையானது சளி, இருமல், வாந்தி, வயிற்றுப் போக்கு, அலர்ஜி போன்ற உபாதைகளையும் உண்டாக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ