புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் வாழைக்காய்: வாழவைக்கும் வாழை
Banana the Anti-Cancer Fruit: வாழைக்காய் சாப்பிடுவது புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என்பது தெரியுமா? வாழையடி வாழையாய் குலம் தளைக்க வைக்கும் வாழை
புதுடெல்லி: புற்றுநோய் என்பது உடலின் எந்தப் பகுதியிலும் ஏற்படக்கூடிய ஒரு தீவிர நோயாகும். பல வகையான புற்றுநோய்கள், உடலின் வெவ்வேறு பாகங்களை வெவ்வேறு வழிகளில் பாதிக்கலாம். புற்றுநோயின் அபாயத்தைப் பற்றி கவனமாக இருக்கவும், அதன் ஆபத்தை அதிகரிக்கும் காரணிகளைத் தவிர்க்கவும் மக்கள் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். நமது உணவு முறையாலும் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது. ஜங்க் ஃபுட் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட்களை சாப்பிடுவதும் புற்றுநோய் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது. பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது புற்றுநோயின் அபாயத்தை கணிசமாகக் குறைக்கும். அத்தகைய பழங்களில் ஒன்று வாழை.இது ஆண்டு முழுவதிலும் எளிதாகக் கிடைக்கும் வாழை, உயிர் வாழும் நாட்களை அதிகரிக்கிறது.
வாழைப்பழம் உண்பது உலகம் முழுவதும் இயல்பாக இருந்தாலும், வாழைக்காயை அனைவரும் சமைத்து சாப்பிடுவதில்லை. உண்மையில், வாழைக்காயை சமைத்து உண்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புதிய ஆய்வின்படி, வாழைக்காய் சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது.
மேலும் படிக்க | அகத்தை சீராக்கும் ‘சீரகம் அளவிற்கு மிஞ்சினால் பெரும் கேடு!
புற்றுநோய் தடுப்பு ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின்படி, வாழைக்காயில் உள்ள ஸ்டார்ச் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது. இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் நியூ கேஸில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
புற்றுநோயைத் தடுக்கும் திறன் கொண்டது வாழைக்காய்
லிஞ்ச் நோய்க்குறியால் பாதிக்கப்பட்டவர்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு 20 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்டது. இந்த நோயாளிகளுக்கு மலக்குடல் புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோயை உருவாக்கும் ஆபத்து மிகவும் அதிகம்.
இந்த நோயாளிகள் அனைவரும் வாழைக்காயில் உள்ள மாவுச்சத்தை உட்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். சிறிது காலம் கழித்து, அந்த நோயாளிகளுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டபோது, கிடைத்த முடிவுகள் ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படுத்தியது.
மேலும் படிக்க | முகத்தில் இந்த மாற்றங்களாம் இருக்கா? ஜாக்கிரதை வயிற்று புற்றுநோயாக இருக்கலாம்!
ஆய்வின் முடிவுகளின்படி, வாழைக்காயில் உள்ள மாவுச்சத்து, கணைய புற்றுநோய், உணவுக்குழாய் மற்றும் இரைப்பை குடல் புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்று தெரிய வந்துள்ளது.
நமது தமிழர்களின் உணவுப் பழக்கத்தில் வாழைக்காய் ஒரு அங்கம் என்பதால் நாம் அந்த ஆரோக்கியமான பழக்கத்தைத் தொடர்ந்தால், புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் குறையும். அதேபோல எடை இழப்புக்கு வாழைக்காய் மிகவும் சிறந்தது. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு ஏராளமான நார்ச்சத்துக்கள் கொண்ட வாழைக்காய் உதவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்கனுமா? மறந்து கூட இந்த 5 தவறுகளை செய்யாதீங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ