முகத்தில் இந்த மாற்றங்களாம் இருக்கா? ஜாக்கிரதை வயிற்று புற்றுநோயாக இருக்கலாம்!

வயிற்றுப் புற்றுநோயின் முதல் அறிகுறிகளில் பசியின்மை, திடீர் எடை இழப்பு, வயிற்று வலி மற்றும் அடிவயிற்றில் வீக்கம் ஆகியவை அடங்கும்.  

Written by - RK Spark | Last Updated : Aug 10, 2022, 06:05 AM IST
  • வயிற்றுப் புற்றுநோயானது இரைப்பைப் புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது.
  • வயிற்றுப் புற்றுநோய் ஆரம்பத்தில் அறிகுறிகளை அரிதாகவே வெளிப்படுத்துகிறது.
  • முதல் அறிகுறிகளில் பசியின்மை, திடீர் எடை இழப்பு ஆகியவை அடங்கும்.
முகத்தில் இந்த மாற்றங்களாம் இருக்கா? ஜாக்கிரதை வயிற்று புற்றுநோயாக இருக்கலாம்!  title=

வயிற்றுப் புற்றுநோயானது இரைப்பைப் புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது, இது வயிற்றின் உள் புறத்தில் உள்ள அசாதாரண செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியின் காரணமாக உருவாகிறது.  வயிற்றுப் புற்றுநோய் ஆரம்பத்தில் அறிகுறிகளை அரிதாகவே வெளிப்படுத்துகிறது, முதன்மை இரைப்பை லிம்போமா, இரைப்பை குடல் ஸ்ட்ரோமல் கட்டி மற்றும் வயிற்றில் உள்ள நியூரோஎண்டோகிரைன் கட்டிகள் உட்பட பல்வேறு வகையான வயிற்று புற்றுநோய்கள் உள்ளன.  இரைப்பை புற்றுநோய் பாப்புலோரித்ரோடெர்மா ஆஃப் ஓபுஜி எனும் அரிய தோல் நோய்க்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.  உடலிலும், குறிப்பாக முகத்தில் வீக்கம் மற்றும் தோல் உரிதல் போன்றவை ஏற்படும்.

வயிற்றுப் புற்றுநோயின் முதல் அறிகுறிகளில் பசியின்மை, திடீர் எடை இழப்பு, வயிற்று வலி மற்றும் அடிவயிற்றில் வீக்கம் ஆகியவை அடங்கும்.  மேலும் நெஞ்செரிச்சல், அஜீரணம், குமட்டல் மற்றும் ரத்தம் கலந்து அல்லது சாதாரண ஏற்படலாம், குறைவாக சாப்பிட்டாலே அதிகம் சாப்பிட்டது போன்ற நிறைவான உணர்வை ஏற்படும், அதோடு ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதும் வயிற்று புற்றுநோயின் அறிகுறியாகும்.  புற்றுநோயானது நமது உடலில் திசுக்கள், நிணநீர் மற்றும் ரத்த நாளங்கள் என மூன்று வழியாக பரவும்.  வயிற்று புற்றுநோயின் முக்கிய ஆபத்து காரணிகளில் ஒன்று  உணவுமுறை, அதிக உப்பு, புகைபிடித்தல் மற்றும் ஊறுகாய் போன்றவற்றை குறைத்துக்கொண்டு பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளவேண்டும். 

cancer

மேலும் படிக்க | Health Care Tips: உங்கள் உடலில் வைட்டமின் குறைபாட்டை உணர்த்தும் அறிகுறிகள் 

ரிஃப்ளக்ஸ் நோய், உடல் பருமன் மற்றும் புகைபிடித்தல் ஆகியவை இரைப்பை புற்றுநோயின் வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.  பெரும்பாலும் வயிறு அடிக்கடி வீங்குதல் அல்லது அதிக வலி ஏற்படுதல் போன்றவற்றின் மூலம் மக்கள் வயிற்று புற்றுநோயின் அறிகுறிகளை உணருகின்றனர்.  உங்களுக்கு புற்றுநோய் பாதிவிட்டது என்கிற சந்தேகம் வந்தால் சிறிதும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது உங்களுக்கு ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.  வயிற்றுப் புற்றுநோய், மண்ணீரல், பெருங்குடல், கல்லீரல், உதரவிதானம், கணையம், வயிற்றுச் சுவர், அட்ரீனல் சுரப்பி, சிறுநீரகம், சிறுகுடல் அல்லது அடிவயிற்றின் பின்புறம் போன்ற அருகிலுள்ள உறுப்புகளுக்கும் பரவக்கூடும்.  நோயின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க முழு தானியங்கள், பாஸ்தா மற்றும் அரிசி போன்ற முழு தானிய உணவுகளை சாப்பிடுவது, ஆல்கஹாலின் அளவைக் கட்டுப்படுத்துவது, புகைபிடித்தலை நிறுத்துவது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை செய்யவேண்டும்.  புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை, ரேடியேஷன் தெரபி, கீமோதெரபி, டார்கெட்டேட் தெரபி   மற்றும் இம்யூனோ தெரபி போன்ற பல சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

மேலும் படிக்க | Monkeypox: இவைதான் குரங்கு அம்மையின் முக்கிய அறிகுறிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News