Side Effects: இந்த உணவுகளை முட்டையுடன் சாப்பிட கூடாது
முட்டையை நாம் சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அது நும்முடைய உடலுக்கு சில கெடுதலையம் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும்
முட்டையில் இருக்கக்கூடிய சத்துக்கள், புரத சத்து, வைட்டமின் டி, ஆன்டிஆக்ஸிடென்ட் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால் இது நம்முடைய உடலுக்கு தேவையான முழு ஆற்றலையும் தெம்பையும் கொடுக்கிறது. ஆனால் இந்த முட்டையை நாம் சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அது நும்முடைய உடலுக்கு சில கெடுதலையம் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும். அப்படி நாம் முட்டையுடன் சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
முட்டை மற்றும் சோயாபால்
முட்டைகளில் (Eggs Benefits) உள்ள புரதம் சோயாபீன் பாலில் உள்ள டிரிப்சினுடன் இணையும். இது நமது உடல் புரோட்டின் உறிஞ்சுவதை தடுக்கிறது கூடவே உடல்சிதைவு பிரச்சனையை ஏற்படுத்தும்.
ALSO READ | ஒரு நாளில் எத்தனை முட்டை சாப்பிடலாம்.. கோடையில் முட்டை சாப்பிடலாமா..!!!
சர்க்கரை மற்றும் முட்டை
முட்டை மற்றும் சர்க்கரையில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்றிணைந்து கிளைகோசைல் லைசின் உருவாகி முட்டைகளில் உள்ள அமினோ அமிலங்களின் (Health Tips) கூறுகளை உடைக்கும். மேலும், நச்சுத்தன்மையுள்ள இந்த சேர்மத்தை உறிஞ்சுவது மிகவும் கடினம், மேலும் இரத்தம் உறைந்து போகும்.
பழங்கள் மற்றும் முட்டை
ஆப்பிள், பேரிக்காய், திராட்சை, பிளம்ஸ், ஆப்ரிகாட், மற்றும் தர்பூசணி போன்ற பழங்களுடன் முட்டை உள்ளிட்ட புரதப் பொருட்களுடன் சாப்பிட அறிவுறுத்தப்படுவதில்லை. முட்டை மற்றும் பழங்களின் செரிமானத்தின் வேகத்தில் உள்ள வேறுபாட்டால் இதை சேர்த்து சாப்பிட கூடாது.
உருளைக்கிழங்கு மற்றும் முட்டை
உருளைக்கிழங்குடன் முட்டை சேர்த்து செய்யப்படும் உணவுப்பண்டங்களை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்படி சாப்பிடுவதால் உருளைக்கிழங்கில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் முட்டையில் உள்ள கால்சியம் மற்றும் இரும்பு சத்தை நம்முடைய உடலானது உறிஞ்சுவதை தடுக்கிறது. எனவே இந்த இரண்டு பொருட்களை கொண்டு உணவுப்பண்டகளை தயாரித்து உண்பது செரிமானத்தை மிகவும் தாமதமாக்கி அஜீரணத்தை ஏற்படுத்தும்.
வாத்து இறைச்சி மற்றும் முட்டை
முட்டையுடன் சேர்த்தோ அல்லது முட்டை சாப்பிட்டபின் வாத்து இறைச்சி சாப்பிடக்கூடாது. ஏனெனில் வாத்து இறைச்சியில் இனிப்பு தன்மையும் குளிர்ச்சியை உண்டாக்கும். முட்டையிலும் அதிக அளவு புரதமும் குளிர்ச்சியை உண்டாக்கும். ஒரே குணமுடைய இந்த இரண்டு பொருள்களும் ஒன்றிணையும் போது அது செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் மேலும் வயிற்றுப்போக்கை உண்டாக்கும்.
ALSO READ | Health news: முட்டை உங்கள் நண்பனா எதிரியா? அது உங்கள் கையில் உள்ளது!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR