கோடை காலத்தில் தோல் பிரச்சனை என்பது பரவலாக அறியப்படுகிற ஒன்று. இந்தப் பிரச்சனைகளுக்காக பலரும் மருத்துவமனைகளுக்கு ஏறி இறங்குவதை பார்க்க முடியும். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், நம் நோயெதிர்ப்பு மண்டலம் ஆபத்து விளைவிக்கும் பாக்டீரியாவை எதிர்த்துப் போராட செல்களை அனுப்பும் போது அழற்சி ஏற்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடலைத் தற்காத்துக் கொள்ள உண்டாகும் இந்த அழற்சி என்பது தீங்கு விளைவிக்கும் ஃபாரீன் ஆப்ஜக்ட்களின் தூண்டுதல்களை நீக்கி நம் உடலைக் குணப்படுத்தும் செயல்முறையைத் தொடங்க வைக்கிறது. ஆனால், உடல் தொடர்ந்து அழற்சி சமிக்ஞைகளை அனுப்பும் போது, ​​​​அது மூட்டுவலி போன்ற பிரச்சனைகளுக்கு வித்திடும். இது போன்ற சிக்கலைக் குறைக்க உடலுக்கு அழற்சி எதிர்ப்பு பண்புகள் தேவைப்படுகிறது. இந்தப் பண்புகள் பெரும்பாலும் வீட்டு சமையலறையில் பயன்படுத்தும் பல உணவுப் பொருட்களிலேயே உள்ளன. அத்தகைய உணவுப் பொருட்களை அன்றாட உணவில் தவிர்க்காமல் சேர்த்துக் கொண்டால் தோல் அழற்சிக்கு ஈஸியாக நிவாரணம் தேடலாம். 


இஞ்சி: 


அழற்சி எதிர்ப்பு பண்புகளை அதிகம் கொண்டிருக்கும் பொருட்களில் இஞ்சிக்கு முதன்மையான இடமுண்டு. சமையலறையில் இருக்கும் இஞ்சியில் ஜிஞ்சரால், ஷோகோல், ஜிங்கிபெரீன் மற்றும் ஜிங்கரோன் போன்ற நூறுக்கும் மேற்பட்ட ஆக்டிவ் காம்பவுண்டுகள் உள்ளன. இவை நம் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.


மிளகு: 


மிளகில் உள்ள பைபரின், நம் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. அதனால் அவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள மறக்காதீர்கள். தோல் வியாதி உள்ளவர்களுக்கு இது நிச்சயம் உபயோகமாக இருக்கும். 


மேலும் படிக்க | உடலில் உள்ள கெட்ட கொழுப்பை போக்க இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்கள்...


மஞ்சள் தூள்: 


மஞ்சள் தூள் பற்றி கூறவே தேவையில்லை. பெரும்பாலும் அவற்றின் பண்புகளை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இருப்பினும் அதில் உள்ள முக்கிய ஆக்ஸிஜனேற்றியான குர்க்குமின் (curcumin), சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. ஆய்வுகளின்படி, அழற்சியை ஊக்குவிக்கும் மரபணுக்களை செயல்படுத்த வல்ல NF-κB-ன் செயல்பாட்டை குர்குமின் தடுக்கிறது. அதனால், குழம்பில் சேர்க்க மறவாதீர்கள்.


துளசி: 


துளசியில் அதிக நன்மைகள் உண்டு என்று அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் நமது சருமத்தை பொலிவாக்கவும் இது உதவுகிறது. துளசி சருமத்திற்கு மிகவும் நல்லது. இந்நிலையில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே, மான்கனீஸ், காப்பர், கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், ஓமேக் 3 பேட்டி ஆசிட் இதில் இருக்கிறது. வயதாவதை தள்ளிபோடும் குணம் துளசியில் உள்ளது. 


இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட் உள்ளதால், வயதாவதை தள்ளிப்போடும். மேலும் நமது சருமத்தை பாதிக்காமல் பார்த்துக்கொள்கிறது. தோல் சிவப்பாவதும், எரிச்சலும், தோல் சுருக்கத்தையும் குறைக்க துளசி உதவும். பங்கஸ் ( fungs) தொற்று மற்றும் பாக்ட்ரீயா ஆகியவற்றிற்கு எதிரான பண்புகளை துளசி வழங்குகிறது. 


அஸ்வகந்தா: 


நாட்டு மருத்துவம், மூலிகை மருத்துவம் மற்றும் டயட்ரி சப்ளிமெண்ட்களில் அஸ்வகந்தா வேர்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலிகை உடலின் நோயெதிர்ப்பு செல்களை மேம்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அஸ்வகந்தாவில் வித்ஃபெரின் ஏ (WA) உள்ளிட்ட கலவைகள் உள்ளன. அதன் காரணமாக, அவை உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுகின்றன. வீக்கத்தைக் குறைப்பதன் மூலம், இது நோயெதிர்ப்பு செல்களை அதாவது தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் வெள்ளை அணுக்களை மேம்படுத்துகிறது என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.


மேலும் படிக்க | கல்லீரல் நோய் பாதிப்பை எப்படி தெரிந்துக் கொள்வது? இந்த அறிகுறிகள் இருக்கா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ