கல்லீரல் நோய் பாதிப்பை எப்படி தெரிந்துக் கொள்வது? இந்த அறிகுறிகள் இருக்கா?

Liver Disease: புரதங்களை உருவாக்குதல், கார்போஹைட்ரேட்டுகளை சேமித்தல், உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்றும் கல்லீரலில் நோய் பாதிப்பு ஏற்பட்டால் எப்படி தெரிந்துக் கொள்வது?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 27, 2023, 06:38 PM IST
  • கல்லீரலில் நோய் பாதிப்பு ஏற்பட்டால் எப்படி தெரிந்துக் கொள்வது?
  • புரதங்களை உருவாக்கும் கல்லீரல்
  • உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்றும் உறுப்பு
கல்லீரல் நோய் பாதிப்பை எப்படி தெரிந்துக் கொள்வது? இந்த அறிகுறிகள் இருக்கா? title=

வாழ்க்கை முறை மோசமாக இருக்கும் போது அல்லது உணவில் அலட்சியம் காட்டுவது போன்றவற்றால், கல்லீரலில் பாதிப்பு ஏற்படுகிறது. கல்லீரலில் நோய் ஏற்பட்டால் அது உடலின் இயக்கத்தைப் பாதிக்கிறது. அதிலும், உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும். பல்வேறு நோய்களில் மிகவும் பொதுவானது கல்லீரல் பாதிப்பு என்று சொல்லலாம்.

கல்லீரல் நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். புரதங்களை உருவாக்குதல், கார்போஹைட்ரேட்டுகளை சேமித்தல், உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்றுதல் என பல முக்கியமான செயல்பாடுகளை செய்யும் உறுப்பு ஆகும்.

கொழுப்பு கல்லீரல் நோய்

கல்லீரல் நோய்களில் முக்கியமானது கல்லீரலில் கொழுப்பு சேரும் ’கொழுப்பு கல்லீரல் நோய்’ ஆகும். கொழுப்பு கல்லீரல் நோய்களில் அடிப்படையில் இரண்டு வகைகள் உள்ளன - ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல் நோய், இது மது அருந்துவதால் கல்லீரலில் கொழுப்பு சேர்வதால் ஏற்படுகிறது.

ஆனால், மது அருந்தாதவர்களுக்கும் கொழுப்பு கல்லீரல் பிரச்சனை ஏற்படுகிறது. இதனை மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் என்று அழைக்கிறோம். மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்க்கான காரணம் வாழ்க்கை முறை மற்றும் சீரற்ற உணவுமுறை ஆகும்.

மேலும் படிக்க | மேல் வயிறு தொப்பையை குறைக்கணுமா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க

கல்லீரல் அழற்சி 

நிபுணர்களின் கூற்றுப்படி, கொழுப்பு கல்லீரல் பிரச்சினைகள் தீவிரமடையும் போது, கல்லீரல் ஈரல் அழற்சி போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். இருப்பினும், இந்த நோயின் அறிகுறிகள் முதலில் அடையாளம் காணப்பட்டால், இந்த நோயை சமாளிக்க முடியும். எனவே இந்த நோயின் சில அறிகுறிகளை தெரிந்து கொள்வோம்

கல்லீரல் நோய் அறிகுறிகள் 

முகத்தில் வீக்கம்

கல்லீரலில் கொழுப்பு படியத் தொடங்கும் போது, ​​அது உடலின் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது.அது முகத்தில் வீக்கத்தை ஏற்படுத்தும். கொழுப்பு கல்லீரலின் முக்கிய அறிகுறிகளில், முகத்தின் வீக்கம், தடிப்புகள், முகத்தில் தோல் சிவந்து போவது, சருமத்தில் அரிப்பு ஆகியவை அடங்கும்.

பசியின்மை
 
பசியின்மை, மற்றும் வாந்தி வருவது போன்ற குமட்டல் உணர்வு ஆகியவை கொழுப்பு கல்லீரல் அறிகுறிகளாக புரிந்து கொள்ள வேண்டும். இப்படி இருந்தால் விரைவில் மருத்துவரை அணுகவும்.

மேலும் படிக்க | இந்த பழங்களை சாப்பிட்டால் எந்த நோயும் வராது..! டையட் இன்றே மாற்றுங்கள்

உடலில் நீர் கோர்ப்பது

கழுத்தின் கீழ் பகுதியில் கருமையாக இருப்பது, கால்கள் மற்றும் உடலின் மற்ற பகுதிகளில் நீர் தேங்குவது போன்றவையும் இந்த நோயின் அறிகுறிகளில் ஒன்றாகும்.

பலவீனம் & எடை குறைவது

கல்லீரல் கொழுப்பு நோயால் பாதிக்கப்பட்டால், உடல் மிகவும் பலவீனமாகிவிடும். இதனுடன், எடையும் வேகமாக குறையத் தொடங்குகிறது.

அல்ட்ராசவுண்ட், என்சைம் சோதனை போன்ற பல்வேறு சோதனைகள் மூலம் இந்த நோயைக் கண்டறியலாம். எனவே கவலைப்பட எந்த காரணமும் இல்லை. இருப்பினும், சில விஷயங்களை கடைபிடித்தால் கல்லீரல் நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகரித்துவிட்டதா? இந்த பழங்களை சாப்பிட தொடங்குங்கள்

கல்லீரல் நோய் ஏற்படமால் இருக்க செய்ய வேண்டியவை

1. மது அருந்த வேண்டாம்

2. எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும்

3. வழக்கமான உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்யவும்

4. காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்

5. நீரிழிவு, கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுக்குள் வைத்திருக்கவும்

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | Mental Health: கண்ணீர் விடும் மனது... 6 அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளுங்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News