உடல் எடை குறைக்கும் சூப்பர் மசாலா! அழகை அதிகரிக்கும் மணமணக்கும் மசாலா
Health Tips with Asafoetida: அஞ்சறைப் பெட்டியிலேயே நமது ஆரோக்கியத்திற்கான மந்திரக்க்கோல் மறைந்திருக்கிறது. அந்த மந்திரக்கோலை தந்திரமாக பயன்படுத்தினால், உடல் இளைத்து அழகாக காட்சியளிக்கலாம்
புதுடெல்லி: அஞ்சறைப் பெட்டியிலேயே நமது ஆரோக்கியத்திற்கான மந்திரக்க்கோல் மறைந்திருக்கிறது. அந்த மந்திரக்கோலை தந்திரமாக பயன்படுத்தினால், உடல் இளைத்து அழகாக காட்சியளிக்கலாம். நாம் தினசரி பயன்படுத்தும் ஒரு மசாலாவை ஒரு சிட்டிகை வெந்நீரில் கலந்து, குடித்தால் தலைவலியில் இருந்து சளி மற்றும் இருமல் வரை நிவாரணம் கிடைக்கும். அது என்ன மசாலா என்று கேட்கிறீர்களா? வாய்த்தொல்லை, வயிற்றுப் பொருமல், என பல நன்மைகளைக் கொடுக்கும் பெருங்காயம் தான் உடல் எடையைக் குறைக்கும் பொருளாகவும் செயல்படுகிறது.
ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சனைகளை நாம் தினசரி எதிர்கொள்கிறோம், ஆனால் ஒவ்வொரு பிரச்சனைக்கும் மருத்துவரிடம் செல்வதை விரும்புவதில்லை. வீட்டு மசாலாப் பொருட்களை சாப்பிடுவதன் மூலம் சில உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அத்தகைய ஒரு மசாலா பெருங்காயம் ஆகும், உணவில் போட்டால் உணவின் வாசனை அதிகரிக்கும் என்பது தெரிந்தாலும், இதை வேறுவிதமாய் பயன்படுத்தினால் பல நோய்களிலிருந்து விடுபடலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
மருத்துவ குணங்களின் பொக்கிஷம் என்று சொல்லப்படும் பெருங்காயம், வெந்நீரில் கலந்து குடித்தால், பல ஆச்சரியமான நன்மைகளைத் தரும் என்று கூறுகின்றனர்.
பெருங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாம்
ஒரு கிளாஸ் தண்ணீரை லேசாக சூடாக்கி, அதில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தைக் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கவும்.
தலைவலி
அடிக்கடி தலைவலி வருபவர்களுக்கு பெருங்காயத்தை வெந்நீரில் கலந்துக் குடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்த மசாலா அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, அத்துடன் தலையின் இரத்த நாளங்களில் வீக்கத்தைக் குறைப்பதோடு, தலைவலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
மேலும் படிக்க | கடுகு எண்ணெயை முடியில் தடவும்போது இந்த தவறை செய்யாதீர்கள்
சளி மற்றும் இருமல்
சளி, இருமல் மற்றும் சளி இருந்தால், வெந்நீர் மற்றும் பெருங்காயத்தை உட்கொள்வதன் மூலம் சுவாச பிரச்சனைகளை சமாளிக்கலாம். மாறிவரும் பருவத்தில் பெருங்காயம் + வெந்நீர் காம்பினேஷம் மிகவும் நன்மை பயக்கும்.
எடை இழப்பு
அசாஃபோடிடா தண்ணீரைக் கொண்டு, அதிகரித்து வரும் எடையைக் குறைக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பெருங்காயம் என்பது ஆச்சரியமான உண்மை. பெருங்காயத்தை தொடர்ந்து பயன்படுத்துவது இதய நோய் அபாயத்தை குறைக்கிறது என்பது ஆச்சரியமான ஆனால் உண்மையான தகவல் ஆகும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையை பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சாப்பிட்டவுடன் வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ