தொப்பை கொழுப்பை குறைப்பது எப்படி: உடல் எடை அதிகரிப்பதும், தொப்பை கொழுப்பு அதிகரிப்பதும் உடலில் பல பிரச்சனைகளை உருவாக்குவது மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் வடிவத்தையும் கெடுத்துவிடுகிறது. இது டைப்-2 நீரிழிவு நோய், இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற தீவிர நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இருப்பினும், சில எளிய நடவடிக்கைகள் மூலம் தொப்பையை குறைக்க முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொப்பையை குறைக்க 4 வழிகள்


உடலுக்கு ஆற்றலைக் கொடுக்க கொஞ்சம் கொழுப்பு இருக்க வேண்டியது அவசியம், ஆனால் அதிகப்படியான கொழுப்பால் நோய்கள் வரும் என்பது சுகாதார நிபுணர்களின் கருத்து. அதைக் குறைக்க தேவையான சில நடவடிக்கைகளை எடுக்கலாம்.


1. தினமும் 10 கிராம் ஃபைபரை (நார்ச்சத்து) உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள் 


தினமும் 10 கிராம் கரையக்கூடிய நார்ச்சத்து சாப்பிடுபவர்கள், வாழ்க்கை முறையில் மற்ற எந்த மாற்றங்களையும் செய்யாமல் தொப்பையை குறைக்கலாம். இதற்கு தினமும் 2 ஆப்பிள் அல்லது ஒரு கப் பச்சை பட்டாணி சாப்பிடலாம். எந்த உணவாலும் தொப்பையை ஒரு நொடியில் அகற்ற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதற்கு நாம் கண்டிப்பாக காத்திருக்க வேண்டும்.


2. 20 நிமிடங்களுக்கு வேகமான உடற்பயிற்சி செய்யுங்கள்


நீங்கள் தொப்பையை குறைக்க விரும்பினால், தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். உங்கள் உடற்பயிற்சி மூலம் வியர்வை எளிதில் வெளியேறுவதும் உடற்பயிற்சியின் போது உடலின் பெரும்பாலான பகுதிகள் வேலை செய்யும் வகையில் இருப்பதும் அவசியமாகும். இதற்கு ஜூம்பா, கால்பந்து, நீச்சல் அல்லது கார்டியோ பயிற்சிகளை செய்யலாம்.


மேலும் படிக்க | Kidney Failure: சிறுநீர் இந்த நிறத்தில் வருகிறதா? சிறுநீரக செயலிழப்புக்கான அறிகுறி 


3. முழுமையான உறக்கம் தேவை


குறைந்த தூக்கம் உங்கள் வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது. இது உடலில் கொழுப்பு விரைவாக குவிவதற்கு வழிவகுக்கிறது. எனவே, தினமும் குறைந்தது 7 முதல் 8 மணிநேரம் உறங்குங்கள். மெல்லிய இடுப்பைப் பெற போதுமான தூக்கம் மட்டும் போதாது. எனினும், இது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். 


4. கவலை வேண்டாம்


எல்லோருடைய வாழ்க்கையிலும் மன அழுத்தம் இருக்கிறது. ஆனால் தொப்பையை குறைக்க, இந்த அழுத்தத்தை வரம்பிற்குள் வைத்திருக்க வேண்டியது மிக அவசியமாகும். ஏனெனில் இதுவும் தொப்பை அதிகரிக்க காரணமாக இருக்கலாம். மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் தியானம் செய்யலாம், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடலாம். அல்லது, இந்த பிரச்சனை மிகவும் அதிகமாக இருந்தால் நிபுணர்களின் உதவியைப் பெறலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.) 


மேலும் படிக்க | 5 நோய்களுக்கு அருமருந்தாகும் தக்காளி - பலன்களை தெரிந்து கொள்ளுங்கள் 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR