5 நோய்களுக்கு அருமருந்தாகும் தக்காளி - பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்

வலுவான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க  தக்காளி பழச்சாறு குடிப்பது நல்லது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 14, 2022, 09:04 PM IST
 5 நோய்களுக்கு அருமருந்தாகும் தக்காளி - பலன்களை தெரிந்து கொள்ளுங்கள் title=

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இல்லை என்றாலும், அதன் ஆபத்து இன்னும் முழுமையாக குறையவில்லை. இதன் பாதிப்பு எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம் என்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை வளப்படுத்திக் கொள்வது அவசியம். இல்லையென்றால் நோய்களின் பாதிப்பில் இருந்து தப்பிப்பது கடினம். 

சளிக்கு நிவாரணம்

பெரும்பாலான மக்கள் ஆண்டு முழுவதும் சளி, இருமல் மற்றும் சளி ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக இருப்பதால் பருவகால நோய்கள் அவர்களை விரைவில் பாதிக்கிறது. இந்த நோய்களைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வேண்டும். 

மேலும் படிக்க | இரவில் குளிப்பதால் இத்தனை நன்மைகளா: ஜாலியா குளிங்க, ஜாலியா இருங்க

தக்காளியில் உள்ள சத்துக்கள்

தக்காளியில் வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-சி, நார்ச்சத்து, ஃபோலேட் மற்றும் கால்சியம் போன்ற பல ஊட்டச்சத்துகள் உள்ளன. அவை உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்டாக செயல்படுகின்றன. இதனால் தக்காளிச் சாறை குடித்து வந்தால், நோய் எதிர்ப்பு மண்டலம் பலமாகும். நோய் உபாதைகளில் இருந்தும் விடுபடலாம். 

தக்காளி சாறின் 4 நன்மைகள்

1. தக்காளி சாறு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்
2. தொடர்ந்து சாப்பிட்டால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் 
3. தக்காளி சாறு உட்கொள்வதும் எலும்புகள் வலுவாகும் 
4. பெண்கள் தக்காளி ஜூஸ் குடிப்பதால் மார்பகப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.

மேலும் படிக்க | Premature Aging: என்றும் மார்கண்டேயனாக இருக்க கவனத்தில் கொள்ள வேண்டியவை

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது)

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News