Sleep vs Belly Fat: தொப்பையில்லா அழகு வேண்டுமா? உறக்கமும் கண்களை தழுவட்டுமே...

உடல் எடை அதிகரிப்புக்கு பல காரணங்கள் இருந்தாலும், வயிற்றில் தொப்பை விழுவதற்கு சில விஷயங்களை ஒழுங்காக கடைபிடித்தாலே போதும். அவற்றில் ஒன்று நல்ல உறக்கம். இதை ஒரு கிளினிக் ஆய்வு உறுதி செய்கிறது.  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 29, 2022, 02:18 PM IST
  • தொப்பைக்கும் உறக்கத்துக்கும் உள்ள தொடர்பு
  • இரவில் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும்
  • தொப்பையில்லா அழகுக்கு உறக்கம் அவசியம்
Sleep vs Belly Fat: தொப்பையில்லா அழகு வேண்டுமா? உறக்கமும் கண்களை தழுவட்டுமே... title=

உடல் எடை அதிகரிப்புக்கு பல காரணங்கள் இருந்தாலும், வயிற்றில் தொப்பை விழுவதற்கு சில விஷயங்களை ஒழுங்காக கடைபிடித்தாலே போதும். அவற்றில் ஒன்று நல்ல உறக்கம். இதை ஒரு கிளினிக் ஆய்வு உறுதி செய்கிறது.  

ஷிப்ட்டில் வேலை செய்வது, மின்னணு சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் அதிகரித்த பயன்பாடு காரணமாக தூக்கமின்மை என்பது பரவலாகிவிட்டது. 

தூக்கம் குறைவதால், உடல் பருமன், கரோனரி இதய நோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல ஆரோக்கிய அபாயங்கள் ஏற்படுகின்றன. தற்போதைய புதிய ஆய்வில், போதுமான தூக்கம் இல்லாததால் ஆரோக்கியமற்ற வயிற்று கொழுப்பு அதிகரிப்பதாக தெரிகிறது. 

மேலும் படிக்க | Belly Fat: தொப்பையை குறைக்க இந்த பானங்கள் உங்களுக்கு உதவும் 

அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜியின் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வில், போதுமான தூக்கமின்மை மொத்த வயிற்று கொழுப்புப் பகுதியில் 9 சதவிகிதம் அதிகரிப்பதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல, வயிற்றின் உள்ளுறுப்பு கொழுப்பில் 11 சதவிகிதம் அதிகரிப்பதற்கும் தூக்கமின்மையே முக்கிய காரணமாகிறது. உள்ளுறுப்பு கொழுப்பு இதயம் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்களுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.  

தூக்கம்-விழிப்பு அட்டவணை (Sleep-wake Schedule)  

பெரியவர்கள் தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். வழக்கமான தூக்கம்-விழிப்பு பழக்கத்தை முடிந்த வரை பின்பற்றவும்.  தேவையை விட அதிக நேரம் தூங்குவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது உங்கள் தூக்க முறையைத் தொந்தரவு செய்யும்.

health

அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும் (Avoid Overeating) 

பசியுடன் படுக்கைக்குச் செல்லாதீர்கள், ஆனால் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இரவு உணவை ஒருபோதும் தவிர்க்காதீர்கள், ஏனெனில் பசியால், நடு இரவில் உறக்கம் கலையலாம். ஆனால் அதற்காக அதிகமாக சாப்பிடக்கூடாது. அதிக உணவும் தூக்கத்தை குலைக்கும்.

படுக்கையறையில் கவனச்சிதறல்களைக் குறைக்கவும் (Reduce Distractions)

health

உங்கள் படுக்கையறையில் வேலை தொடர்பான பணிகள், டிவி பார்ப்பது அல்லது டேப்லெட்கள் அல்லது கணினியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உறங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன் ஆஃப்-ஸ்கிரீன் நேரத்தைக் குறைப்பது உடல் பருமன் அதிகரிப்பதைக் குறைக்கும்.

மேலும் படிக்க | தொப்பையை குறைக்க இந்த 4 உணவுகள் மட்டும் போதும்

தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள் (Exercise Regularly) 
தூக்கத்தின் தரம் அல்லது தூங்கும் நேரத்தை உடற்பயிற்சி மேம்படுத்துகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

ஆனால் உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக கடுமையான உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும், ஏனெனில் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் தூங்குவதில் சிக்கல் ஏற்படும்.

மேலும் படிக்க | இதயத்தில் ஏற்படும் ரத்தக்கட்டிகள் கண்டுபிடிப்பது எப்படி? இதோ அறிகுறிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News