எடை குறைப்பு: நம்மில் பலர் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுகிறோம். உடல் எடையை குறைக்க பல வித முயற்சிகளை மேற்கொள்கிறோம். அதிகரிக்கும் எடையைக் குறைக்க நம்மில் பலர் மிகவும் கடினமாக முயற்சி செய்கிறோம். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தாலும், விரும்பிய பலனை அடைய முடிவதில்லை. எனினும், உடற்பயிற்சியுடன் சில இயற்கையான வழிகளின் மூலமும் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அப்படி சில எளிய இயற்கையான வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பகுதியில் மட்டும் பிரச்சனை?


உடல் பருமனை பொறுத்த வரை, பலருக்கு ஒரு விசித்திரமான பிரச்சனை இருக்கும். அதாவது, பலருக்கு கை கால்கள் மெலிதாக, சரியாக இருக்கும். ஆனால், தொப்பை மற்றும் இடுப்பு பகுதி மட்டும் மிகப்பெரியதாக இருக்கும். இதற்கு ஆரோக்கியமற்ற உணவு ஒரு மிகப்பெரிய காரணமாகும். வெளியே உட்கொள்ளப்படும் துரித உணவுகளை (ஃபாஸ்ட் ஃபுட்) சாப்பிடுவதால், வயிறு வெளியே வர ஆரம்பிக்கிறது. தொப்பையில் கொழுப்பு சேர்ந்துவிட்டால், அதை அவ்வளவு எளிதாக குறைக்க முடியாது. 


அத்தகைய சூழ்நிலையில், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள சில வீட்டு வைத்தியங்கள் உங்கள் வயிற்றில் சேர்ந்துள்ள விடாப்படி கொழுப்பை குறைக்க உதவும். இந்த ஆரோக்கிய குறிப்புகள் நேரடியாக வயிற்றை குறிவைத்து கொழுப்பை தாக்குகின்றன. இவற்றை பயன்படுத்திப் பார்த்தால் கண்டிப்பாக உங்கள் தொப்பை கொழுப்பும் இடுப்பு கொழுப்பும் குறையும். நீங்கள் முற்றிலும் பிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள். இந்த கொழுப்பு இழப்பு குறிப்புகள் என்ன? இவற்றை எப்படி செய்வது? இவை அனைத்தையும் இந்த பதிவில் காணலாம். 


தொப்பையை குறைப்பதற்கான வீட்டு வைத்தியம்:


நெல்லிக்காய் சாறு:


நெல்லிக்காய் சாறு வயிற்றின் கொழுப்பை குறைத்து அதை உள்பக்கமாக கொண்டு செல்வதில் பயனுள்ளதாக இருக்கும். நெல்லிக்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. இத்தகைய சூழ்நிலையில், நெல்லிக்காய் சாறு தொப்பையை குறைக்க நல்ல முறையில் உதவும். நெல்லிக்காய் சாறு தவிர, அதன் ஊறுகாய், பச்சடி அனைத்தும் எடை இழப்புக்கு சிறந்தவை. 


வெந்தயம்


எடை இழப்பு உணவில் நார்ச்சத்து நிறைந்த வெந்தயத்தையும் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளலாம். வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் இந்த தண்ணீரை சூடாக்கி வெறும் வயிற்றில் குடிக்கவும். இந்த நீரை தினமும் பருகலாம். இதனால் தொப்பையில் சேர்ந்துள்ள கொழுப்பு குறைவதுடன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் இது நல்ல பலனளிக்கும்.


மேலும் படிக்க | இரசாயன முறையில் பழுத்த மாம்பழங்களை அடையாளம் காண இதோ டிப்ஸ்


எலுமிச்சை சாறு


எலுமிச்சம் பழச்சாறு உட்கொள்வதும் பருமனாகிக்கொண்டிருக்கும் வயிற்றை உள்ளே கொண்டு செல்ல மிகவும் உதவியாக இருக்கும். எலுமிச்சை சாறு வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது, கொழுப்பைக் கரைக்கிறது மற்றும் தொப்பை கொழுப்பை குறைப்பதில் விரைவான விளைவைக் காட்டுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறுடன் அரை டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம். வெறும் எலுமிச்சம் பழச்சாற்றையும் குடிக்கலாம். எலுமிச்சை சாறு எடை குறைக்கும் முயற்சியில் அதிகப்படியான பலன்களை அளிக்கும். 


ஓம தண்ணீர்


தினமும் காலை மற்றும் மாலையில் ஓம தண்ணீரை தயாரித்து குடித்து வந்தால், வயிற்றில் வித்தியாசம் தெரியும். இரவில் ஒரு ஸ்பூன் ஓம விதைகளை 3 கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். இந்த தண்ணீர் 3 கிளாஸில் இருந்து 2 கிளாஸாகக் குறையும் வரை கொதிக்க வைக்கவும். இப்போது இரவு உணவுக்கு அரை மணி நேரம் கழித்து இந்த தண்ணீரை ஒரு டம்ளர் குடித்துவிட்டு, மறுநாள் காலையில் மீதமுள்ள தண்ணீரை குடிக்கவும்.


இப்படி செய்துவந்தால், சில நாட்களில் வித்தியாசத்தை காணலாம். உடலில் ஜீரண சக்தியை அதிகரித்து, இயக்கத்தை சரி செய்து, கொழுப்பை கரைத்து, உடல் எடையை குறைப்பதில் ஓம தண்ணீர் மிகவும் விரைவாகவும், எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாமலும் நமக்கு உதவும். 


மேலும் படிக்க | இளமையில் தோன்றும் நரை முடியை சரிசெய்ய இந்த 4 பொருட்களை சாப்பிடுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ