கோடையில் கொழுப்பை எரிக்கும் இயற்கை பானம்: நம்மில் பலர் உடல் பருமன் அதிகரிப்பதால் பல பிரச்சனைகளுக்கு ஆளாகிறோம். இதற்கு முக்கிய காரணம் நாம் உட்கொள்ளும் உணவுதான். எண்ணெய் மற்றும் இனிப்பு உணவுகளை அதிகமாக உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், உணவின் அளவை குறைத்தால், உடல் எடை வேகமாக குறையும் என்று நினைக்கிறோம். ஆனால், உணவை குறைப்பதால் உடல் எடை குறையாது, மாறாக நமது உடலின் ஆற்றலில்தான் பாதிப்பு ஏற்படும். இதற்கு பதிலாக சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் உடல் எடையை குறைக்கலாம். அப்படிப்பட்ட ஒரு எளிய வீட்டு வைத்தியம் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
உடல் பருமன் என்பது இந்த நாட்களில் ஒரு பெரிய நோயாக கருதப்படுகின்றது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகில் சுமார் 2 பில்லியன் மக்கள் பருமனாக உள்ளனர். உடல் பருமனை சரியான நேரத்தில் குறைக்காவிட்டால், உடலில் பல நோய்கள் வளர வாய்ப்புள்ளது. நீரிழிவு மற்றும் இதய நோய் ஆகியவை உடல் பருமனால் ஏற்படும் இரண்டு முக்கிய நோய்கள் ஆகும். ஆகையால் எப்படியாவது உடல் பருமனை குறைக்க வேண்டியது மிக அவசியமாகும்.
உடல் பருமனை குறைப்பது ஒன்றும் கடினம் அல்ல. இதற்கு வலுவான உறுதிப்பாடு தேவை, அவ்வளவுதான். கோடை காலம் உடல் பருமனை குறைக்கும் வாய்ப்பை அளிக்கிறது. ஏனெனில் கோடையில் நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள்கூட நம் உடல் எடையை குறைக்க உதவுகின்றன. கோடையில் எடையை குறைக்க அதிக முயற்சி எடுக்கத் தேவையில்லை.
நீங்களும் உடல் எடையை குறைக்க விரும்பினால் கோடைக்காலம் உங்களுக்கு ஒரு அற்புதமான பருவமாக இருக்கும். நாள் முழுவதும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள் மற்றும் காலையிலும் மாலையிலும் ஏரோபிக் உடற்பயிற்சி செய்யுங்கள். இத்துடன் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை பானங்களையும் உட்கொள்ளுங்கள். அதன் பின்னர் நீங்கள் நினைத்தபடி உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.
இந்த 3 இயற்கை பானங்கள் மூலம் உடல் பருமனை குறைக்கலாம்:
1. எலுமிச்சை - இஞ்சி: கொழுப்பை எரிக்கும் பானம்
எலுமிச்சை மற்றும் இஞ்சி கொண்டு தயாரிக்கப்படும் இயற்கை பானம் கோடையில் உடல் பருமனை நீக்கும். இதற்கு இரண்டு எலுமிச்சம்பழங்களில் இருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும். அவற்றின் தோலை ஒரு லிட்டர் தண்ணீரில் போடவும். அதில் அரை டீஸ்பூன் கருப்பு மிளகு தூள் மற்றும் ஒரு அங்குல இஞ்சி சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின் அதனை ஆறவைத்து வடிகட்டி அதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். பின்னர் அதை குடிக்கலாம். இந்த இயற்கை பானம் நாள் முழுவதும் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் பருமனை மிக விரைவாக குறைக்கும்.
மேலும் படிக்க | மின்னல் வேகத்தில் எடை குறைக்கும் பச்சை மிளகாய்..எப்படி சாப்பிட வேண்டும்?
2. சீரகம் - இலவங்கப்பட்டை: கொழுப்பை எரிக்கும் பானம்
இந்த பானத்தை தயாரிக்க, ஒரு லிட்டர் தண்ணீரில் 3 டீஸ்பூன் சீரகம் மற்றும் 3 இன்ச் இலவங்கப்பட்டையை போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு ஆறவைத்து வடிகட்டவும். இப்போது அதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். 10 நாட்களில் வித்தியாசத்தை உணரலாம்.
3. சியா விதைகள் - எலுமிச்சை: கொழுப்பு எரிக்கும் பானம்
இந்த பானத்தை தயாரிக்க, 2 டீஸ்பூன் சியா விதைகளை ஒரு கப் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதன் பிறகு மேலும் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும். அதன் பிறகு தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதை செய்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். சியா-எலுமிச்சை கொழுப்பை எரிக்கும் பானம் உடல் பருமனைக் குறைப்பதற்கான ஒரு சஞ்சீவியாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான கிரீன் டீ கல்லீரலை பாதிக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ