Belly Fat Reduction: இரவு உணவில் இந்த மாற்றங்களை செஞ்சா உடல் எடை சட்டுனு குறையும்
Belly Fat Reduction Tips: தொப்பை விழாமல் தடுக்க இரவு உணவில் செய்யும் சில மாற்றங்கள் கை கொடுக்கும் என்கிறார்கள் சுகாதார நிபுணர்கள்.
தொப்பையை குறைக்கும் வழிகள்: உடல் எடையை குறைப்பது இந்நாட்களில் கடினமான பணியாகிவிட்டது. அதுவும் வயிற்று பகுதியில் கொழுப்பு சேர்ந்து தொப்பை பிரச்சனை பலரையும் பாடாய் படுத்துகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது ஆரோக்கியத்துக்கு முற்றிலும் நல்லதல்ல. மறுபுறம், தொப்பை கொழுப்பு உங்கள் தோற்றத்தையும் கெடுக்கிறது. இதன் காரணமாக, இதிலிருந்து தீர்வு காண மக்கள் பல்வேறு வகையான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை பின்பற்றுகின்றனர்.
அதிகரித்த உடல் எடை அல்லது உடல் பருமன் காரணமாக உடலை ஸ்லிம்மாகவும் ஃபிட்டாகவும் வைத்திருப்பது மிகவும் கடினமாகி விடுகிறது. இதுமட்டுமின்றி, உடலில் தேங்கியுள்ள கொழுப்பு, பல கொடிய நோய்கள் உருவாக காரணமாகிறது. உடல் எடையை குறைத்து, தொப்பை விழாமல் தடுக்க இரவு உணவில் செய்யும் சில மாற்றங்கள் கை கொடுக்கும் என்கிறார்கள் சுகாதார நிபுணர்கள். இவற்றின் மூலம் தொப்பையை குறைப்பதுடன் உடல் முழுவதும் உள்ள கொழுப்பையும் நாம் குறைக்க முடியும். இதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காணலாம்.
இரவு உணவின் போது இந்த விதிகளை பின்பற்றவும்:
மாலையில் சத்தான உணவை உண்ணுங்கள்:
மாலையில் ஆரோக்கியமான உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும். இது உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருப்பது போன்ற உணர்வை தருவதோடு, வயிறு லேசாகவும் இருக்கும்.
சிவப்பு அரிசி, பச்சை பயறு, நெய், நெல்லிக்காய், பால், பார்லி, தினை, மாதுளை, தேன், திராட்சை, கல் உப்பு போன்றவற்றை தொடர்ந்து இரவில் உட்கொள்ளலாம். இதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த உணவுகள் குறிப்பாக தானியங்கள் மற்றும் புரதங்கள் இயற்கையில் இலகுவானவை, ஜீரணிக்க எளிதானவை.
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை கட்டுபடுத்த உதவும் கொய்யா இலை
இரவு உணவில் தினை சாப்பிடுங்கள்
இரவு உணவில், தினை தோசை, தினை புலாவ், தினை கிச்சடி போன்றவற்றை உட்கொள்வது நல்லது. இவை ஜீரணிக்க எளிதானவை. மேலும் இவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இவற்றால் நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பி இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். மேலும், இது உங்கள் வயிற்றுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த உணவுகளால், வயிறு ஆரோக்கியமாக இருக்கும். இவற்றை தினமும் இரவு உணவின் போது உட்கொள்வதன் மூலம், தொப்பையை எளிதில் குறைக்க முடியும்.
சூரிய அஸ்தமனத்திற்கு முன் இரவு உணவை உட்கொள்வது நல்லது:
தொப்பையை குறைக்க, சூரிய அஸ்தமனத்திற்கு முன் இரவு உணவை சாப்பிடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் எடையை எளிதில் குறைக்கலாம். இரவு உணவை உண்பதற்கும் உறங்குவதற்கும் இடையில் போதுமான இடைவெளி இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நீரிழிவு நோயால் அவதியா? சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த வீட்டு வைத்தியம் உதவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ