தொப்பை குறையணுமா? இனி கவலை வேண்டாம்... இதை மட்டும் பண்ணுங்க பொதும்!!
Belly Fat Reduction: தொப்பையில் கொழுப்பு அதிகரிப்பதற்கான காரணம் என்ன? இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
How To Lose Belly Fat Fast: தொப்பை அதிகரிக்க காரணம் என்ன? இந்தக் கேள்வி பலரது மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. சிலர் அதிகம் சாப்பிட்டாலும் வயிறு வெளியே வராமல் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதே சமயம் சிலருக்கோ சிறிது சாப்பிட்டாலும் வயிறு வெளியே வரும். தொப்பையை குறைக்க மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் பல வித உணவுமுறைகளை பின்பற்றியும், பல வித உடற்பயிற்சிகளை செய்தும், பலரால் உடல் பருமனை குறைப்பதில் வெற்றிபெற முடிவதில்லை. தொப்பையில் கொழுப்பு அதிகரிப்பதற்கான காரணம் என்ன? இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உணவுப் பழக்கம்: அதிக எண்ணெய் கொண்ட, காரமான உணவுகள், அதிக இனிப்புகள் அல்லது துரித உணவுகளை சாப்பிடுவது தொப்பையை அதிகரிக்கும். அத்தகைய உணவுகளில் அதிக கலோரிகள் இருக்கும். இவற்றை நாம் உட்கொள்ளும்போது, அது கொழுப்பு வடிவத்தில் வயிற்றில் சேமிக்கப்படுகிறது.
குறைந்த உடற்பயிற்சி: நாள் முழுவதும் உட்கார்ந்து இருப்பதாலும், மிக குறைவான உடல் அசைவு இருப்பதாலும் நம் உடலில் கொழுப்பு சேரத் தொடங்குகிறது. இது தொப்பையை அதிகரிக்கிறது.
வயது: நமது வயது அதிகரிக்க அதிகரிக்க, நம் உடலின் கொழுப்பை எரிக்கும் திறன் குறைகிறது. அதனால் பெரியவர்களுக்கு விரைவாக வயிறு வெளிவரத் தொடங்குகிறது.
மேலும் படிக்க | எச்சரிக்கை! வயிற்று புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் இவைகள் தான்!
மன அழுத்தம்: அதிகமாகக் கவலைப்படுவதும் நம் உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. இது தொப்பை கொழுப்பை அதிகரிக்கும். மன அழுத்தம் நம் உடலில் கார்டிசோல் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இது தொப்பையை அதிகரிக்கிறது.
தூக்கமின்மை: நல்ல தூக்கத்தைப் பெறுவதால் நம் உடலின் அனைத்து செயல்முறைகளும் சரியாக வேலை செய்கின்றன. தூக்கமின்மை நம் உடலில் கொழுப்பு சேரும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது.
இந்த வழிமுறைகளால் தொப்பையை குறைக்கலாம்
அதிக தண்ணீர் குடிக்கவும்: தொப்பையை குறைக்க எளிதான வழி தண்ணீர் குடிப்பதாகும். உடலில் போதிய அளவு தண்ணீர் இல்லதபோது, நாம் அதிக பசியை உணர்கிறோம். அத்தகைய சூழ்நிலையில், நாம் அதிக உணவை சாப்பிடுகிறோம். இதன் காரணமாக எடை அதிகரிக்கத் தொடங்குகிறது. ஆகையால் கண்டிப்பாக அதிக தண்ணீர் குடிக்க முயற்சி செய்ய வேண்டும். குறிப்பாக, உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் ஒன்று முதல் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் வயிற்றில் நிரம்பிய உணர்வு ஏற்படுவதோடு, அதிகமாக சாப்பிடுவதையும் தவிர்க்கலாம்.
மன ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது: அதிகப்படியான கவலை அல்லது மன அழுத்தம் நம் உடலில் கொழுப்பை அதிகரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. எனவே, நாம் நம் மனதைக் கவனித்துக் கொள்ள வேண்டும். இதற்கு நாம் தியானம், யோகா மற்றும் பிற மன அழுத்தத்தை குறைக்கும் முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.
உணவில் புரதத்தின் அளவை அதிகரிக்கவும்: உங்கள் கலோரி உட்கொள்ளலைக் குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் புரதத்தின் அளவை அதிகரிக்கவும். புரோட்டீன் சாப்பிடுவதால் வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருப்பதோடு, அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் தவிர்க்கப்படுகின்றது. புரதம் வளர்சிதை மாற்ற விகிதத்தையும் அதிகரிக்கிறது. இது கூடுதல் கலோரிகள் மற்றும் கொழுப்பை எரிக்க உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் பருமன் பிரச்சனையா? கலோரியை இப்படி கம்மி பண்ணுங்க.. எடை தானா குறையும்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ