தொப்பையை வேகமாக குறைக்க இந்த பானங்களை ட்ரை பண்ணுங்க
நீங்கள் விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பினால், இந்த ஆரோக்கியமான பானங்களை வீட்டிலேயே செய்து குடிங்க கட்டாயம் நல்ல முடிவினை நீங்கள் காண்பீர்கள்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உருவ அமைப்பையே மாற்றி விடும் ஒரு பிரச்சனையாக தொப்பை உருவெடுத்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பள்ளி செல்லும் சிறுவன் கூட தொப்பையுடன் இருப்பதை காண முடிகிறது. இதற்கு காரணம் உணவு பழக்கத்தில் தொடங்கி, வாழ்க்கை முறையே மாறி இருப்பது தான். தொப்பை என்றால் அழகு சார்ந்த பிரச்னையாக மட்டுமே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது ஆரோக்கியம் சார்ந்த பல பிரச்சனைகளின் ஆதாரமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சில ஆரோக்கியமான உணவுகள் மூலம் உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைப்பதற்கான பாதையில், நம்முடைய உணவு மற்றும் பான பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
நீங்கள் ஒரு நல்ல பானத்துடன் உங்கள் நாளைத் தொடங்கும் போது உங்கள் கொழுப்பைக் குறைக்கும் வாய்ப்பை அதிகரிக்கலாம். அந்த வகையில் உங்கள் பெல்லியில் சேரும் கொழுப்பை குறைக்க இந்த ஆரோக்கியமான பானங்களை வீட்டிலேயே செய்து குடிங்க கட்டாயம் நல்ல முடிவினை நீங்கள் காண்பீர்கள்.
மேலும் படிக்க | இதயத்தில் ஏற்படும் ரத்தக்கட்டிகள் கண்டுபிடிப்பது எப்படி? இதோ அறிகுறிகள்
1. பெருஞ்சீரகம் நீர்
பெருஞ்சீரகம் நீர் பொதுவாக உடலை நச்சுத்தன்மையாக்குவதற்கான ஒரு வழியாகக் கருதப்படுகிறது, ஆனால் இந்த தண்ணீரின் மூலம் எடையையும் குறைக்க முடியும் என்பது மிகச் சிலருக்குத் தெரியும். இதைத் தயாரிக்க, ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும்.
2. தேன் மற்றும் எலுமிச்சை
எடை இழப்புக்கு, வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் எலுமிச்சையை போட்டு, ஒரு ஸ்பூன் தேன் கலக்கவும். இந்த பானத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இது தொப்பையை வேகமாக குறைக்கும். என்வே இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
3. ஓம தண்ணீர்
ஆரோக்கியமான உடல் எடையைக் கொண்டிருக்க தினமும் ஓம விதைகளைப் பயன்படுத்தி டீ அருந்தி வந்தால் உடல் எடைக் குறையும் என ஆய்வு தெரிவிக்கிறது. அதோடு அது செரிமானத்தை சீராக்கவும், மெட்டாபாலிசத்தை தூண்டவும் உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Belly Fat: தொப்பையை குறைக்க இந்த பானங்கள் உங்களுக்கு உதவும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR