பூண்டு டீ குடிப்பதால் இத்தனை நன்மைகளா? அதிசயிக்க வைக்கும் health news
Garlic Tea: அதிகம் அறியப்படாத பல நன்மைகள் பூண்டு தேநீரில் உள்ளன. இதன் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
தேநீர் என்பது நமது உடலுக்கு தெம்பும் புத்துணர்ச்சியும் அளிக்கும் பானமாகும். தேநீரில் இஞ்சி, புதினா, எலுமிச்சம்பழம், லவங்கம் என பல வித பொருட்களை போட்டு மசாலா டீ அருந்துகிறோம். ஆனால், பூண்டு டீ பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம்.
பூண்டு டீயில் பல வித ஆச்சரியமான குணங்களும் அதிசய பலன்களும் உள்ளன. பூண்டு டீ குடிப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு பல நன்மைகள் உண்டாகின்றன. பூண்டு போட்ட தேநீர் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். இது தவிர, அதிகம் அறியப்படாத பல நன்மைகளும் இதில் உள்ளன. பூண்டு தேநீரின் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
பூண்டு டீ குடிப்பதால் கிடைக்கும் 7 நன்மைகள்
பூண்டில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நீங்கள் விரும்பினால், பூண்டு தேநீரில் சிறிது இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை சேர்க்கலாம். இப்படி செய்வதால், இதன் ஆரோக்கிய நன்மைகள் மேம்படும். தேநீர் சுவையும் அதிகரிக்கும்.
1. நீரிழிவு நோயாளிகளுக்கு பூண்டு தேநீர் மிகவும் நன்மை பயக்கும். இதனால் உடலில் இரத்த சர்க்கரை அளவு குறைகிறது. மேலும் வளர்சிதை மாற்ற நிலையில் இது உதவுகிறது.
2. பூண்டு டீ சாப்பிட்டால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கும்.
மேலும் படிக்க | வாழ்க்கையை முடக்கும் ‘தண்டு வாதம்’; இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்..!!
3. பூண்டு டீ மூலம் உடல் எடையை குறைக்கலாம். இந்த தேநீர் உங்கள் உடலின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. பூண்டு போட்ட தேநீர், இது எடை இழப்புக்கு உதவுகிறது.
4. பூண்டு தேநீர் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இதனை உட்கொள்வதால் இரத்த ஓட்டம் மேம்படும், கெட்ட கொலஸ்ட்ரால் அளவும் குறைகிறது. இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.
5. பூண்டு தேநீர் சுவாச நோய்களில் இருந்து பாதுகாக்கும். குளிர் காலத்திலும் இதை சாப்பிட்டு வர காய்ச்சல் மற்றும் இருமல் குணமாகும்.
6. இந்த தேநீர் ஒரு சக்திவாய்ந்த ஆண்டிபயாடிக் பானமாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
7. பூண்டு தேநீர் உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கிறது.
பூண்டு தேநீர் தயாரிப்பது எப்படி?
பூண்டு தேநீர் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம். முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். சிறிது நேரம் கழித்து, நறுக்கிய பூண்டையும் அதில் சேர்க்கவும். இதனுடன், ஒரு ஸ்பூன் கருப்பு மிளகு சேர்த்து, பின்னர் இந்த தேநீரை ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, கேஸ் அடுப்பை நிறுத்தி, தேநீரை ஒரு பாத்திரத்தில் வடிகட்டவும். உங்கள் உடலுக்கு அதிக நன்மைகளை அளிக்கவல்ல பூண்டு தேநீர் தயார்!!
மேலும் படிக்க | Health Alert! ஜூஸ் உடன் மாத்திரை எடுத்துக் கொள்ளலாமா; நிபுணர்கள் கூறுவது என்ன..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR