நீரிழிவு நோயாளிகள் மஞ்சளுடன் இதை சாப்பிட்டால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்

Diabetes Control: நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவு குறித்து எப்போதும் அச்சத்தில் இருப்பார்கள். வீட்டு சமையலறையில் இருக்கும் சில பொருட்களின் மூலம் இதை எளிதாக கட்டுப்படுத்தலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 3, 2022, 04:32 PM IST
  • நீரிழிவு நோய்க்கு மஞ்சள் பயனுள்ளதாக இருக்கும்.
  • நெல்லிக்காயுடன் மஞ்சள் கலந்து சாப்பிடவும்.
  • இஞ்சி-மஞ்சள் கலவை நன்மை தரும்.
நீரிழிவு நோயாளிகள் மஞ்சளுடன் இதை சாப்பிட்டால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம் title=

இந்த காலத்தில், வயது வரம்பு இல்லாமல், அனைத்து வயதினரையும் ஆட்டிப்படைக்கும் ஒரு நோய் நீரிழிவு நோயாகும். முன்னர் வயதானவர்களை மட்டும் தன் பிடியில் சிக்க வைத்துக்கொண்டிருந்த இந்த நோய், இப்போது சிறு வயதினரையும் விட்டு வைப்பதில்லை. 

இன்றைய காலகட்டத்தில் 30 வயது இளைஞர்களும் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். 70 வயது முதியவர்களும் கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். நீரிழிவு நோயால் விழித்திரை பிரச்சனை, மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்ற தீவிர பிரச்சனைகளும் வருவதால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமாகும். இல்லையெனில் இந்த சைலண்டு கில்லர் நோய் உடலில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். 

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சில எளிய செயல்முறைகள் உள்ளன. எளிதில் செய்யக்கூடிய இந்த பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம். 

நீரிழிவு நோய்க்கு மஞ்சள் பயனுள்ளதாக இருக்கும்

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மருந்துகளை உட்கொள்வது அவசியம், ஆனால் அதனுடன் சில மூலிகை மருந்துகள் அல்லது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் பொருட்களை உட்கொள்வது நல்லது. இந்திய சமையலறையில் தினசரி பயன்படுத்தப்படும் சில பொருட்கள் நீரிழிவு சிகிச்சையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மஞ்சள் இதில் ஒன்று. இதை 2 பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால், அற்புத பலன் கிடைக்கும். சில நாட்களில், நீரிழிவு நோயாளியின் இரத்த சர்க்கரை அளவில் வித்தியாசம் தெளிவாகத் தெரியும்.

மேலும் படிக்க | பாலியல் பிரச்சனைக்கு வயாகரா தேவையில்லை; மாதுளையே போதும்..!! 

1. மஞ்சள் மற்றும் நெல்லிக்காய்

மஞ்சளில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மறுபுறம், நெல்லிக்காயில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. நெல்லிக்காய் கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்துகிறது. இந்த இரண்டின் கலவையானது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பொருட்களை பாலுடன் சாப்பிட மறக்காதீர்கள்.

2. இஞ்சி மற்றும் மஞ்சள்

இஞ்சி மற்றும் மஞ்சளின் கலவை இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் காலையில் ஒரு கிளாஸ் பாலில் இஞ்சி-மஞ்சள் கலந்து குடிப்பது மிகவும் நன்மை பயக்கும்.

3. இலவங்கப்பட்டை ஒரு சஞ்சீவியாகும்

நீரிழிவு நோயாளிகளுக்கு இலவங்கப்பட்டை சாப்பிடுவது ஒரு சஞ்சீவியைப் போன்றது. கரம் மசாலாவாகப் பயன்படுத்தப்படும் இலவங்கப்பட்டை இன்சுலின் செயல்பாட்டைத் தூண்டுகிறது. நீரிழிவு நோயாளிகள் தினமும் 250 மி.கி இலவங்கப்பட்டை சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதை தண்ணீருடன் சேர்த்தும் பாலுடன் சேர்த்தும் சாப்பிடலாம். இலவங்கப்பட்டை நல்ல தூக்கத்தைப் பெறவும் மிகவும் உதவியாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.) 

மேலும் படிக்க | இதை காலை உணவாக சாப்பிட்டு வந்தால் தொப்பை கொழுப்பு ஈஸியா குறையும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News