வாழ்க்கையை முடக்கும் ‘தண்டு வாதம்’; இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்..!!

இன்றைய கால கட்டத்தில் மூட்டுவலி, ஸ்பான்டைலிடிஸ் மற்றும் அன்கிலோசிங் ஸ்பான்டைலிடிஸ் என்னும் தண்டு வாதம் போன்ற நோய் பாதிப்புகள் இளைஞர்களிடையே கூட காணப்படுகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 4, 2022, 06:43 AM IST
  • ஸ்பான்டைலிடிஸ் அன்றாட வாழ்க்கையை ஆபத்தான நோய்.
  • இளைஞர்களையும் தாக்கும் மூட்டுவலி.
  • மரபணு மாற்றம் ஒரு முக்கிய காரணம்.
வாழ்க்கையை முடக்கும் ‘தண்டு வாதம்’; இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்..!! title=

முதுகு வலி, மூட்டு வலி காரணமாக இரவிலும் தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா.. அப்படியானால் நிச்சயம் மருத்துவரை அணுகவும். இது ஸ்பான்டைலிடிஸ் பாதிப்பாக இருக்கலாம். ஸ்பான்டைலிடிஸ் இதயம், நுரையீரல் மற்றும் குடல் உட்பட உடலின் பல பாகங்களை கூட பாதிக்கலாம்.

ஸ்பான்டைலிடிஸ் என்னும் ஆபத்தான நோய் 

ஸ்பான்டைலிடிஸ் என்பது ஒரு வகை மூட்டுவலி. இதில், இடுப்பில் இருந்து வலி தொடங்கி, முதுகு மற்றும் கழுத்தில் ஆகியவற்றில் வலியை ஏற்படுத்துவதோடு, உடலின் கீழ் பகுதி, தொடைகள், முழங்கால்கள் மற்றும் கணுக்கால் ஆகியவற்றிலும் வலி ஏற்படுகிறது. முதுகுத்தண்டில் விறைப்பு தண்மை நீடிக்கிறது. ஸ்பான்டைலிட்டிஸில், மூட்டுகளில் வீக்கம் மற்றும் வீக்கத்தால் தாங்க முடியாத வலி இருக்கும்.

மேலும் படிக்க | Men's Health: ஆண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ‘இவை’ அத்தியாவசியம்

இளைஞர்களையும் தாக்கு ஸ்பான்டைலிடிஸ் 

தற்போது இளைஞர்கள் மத்தியில் ஸ்பான்டைலிடிஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஸ்பான்டைலிடிஸ் பொதுவாக 45 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் பதிவாகும். அன்கிலோசிங் ஸ்பான்டைலிடிஸ் என்பது ஒரு பொதுவான வகை மூட்டுவலி ஆகும், இதில் முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டு, முதுகெலும்புகளில் கடுமையான வலி ஏற்படுகிறது. இதில், தோள்பட்டை, இடுப்பு, விலா, கணுக்கால், கை, கால் மூட்டுகளில் வலி ஏற்படும். இது கண்கள், நுரையீரல் மற்றும் இதயத்தையும் பாதிக்கிறது.

குழந்தைகளுக்கும் மூட்டுவலி 

சிறார் ஸ்போண்டிலோஆர்த்ரிடிஸ் குழந்தைகளில் ஏற்படுகிறது. இது 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் காணப்படுகிறது. இது முதிர்வயது வரை தொடர்கிறது. இதில், உடலின் கீழ்பகுதி மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. தொடைகள், இடுப்பு, முழங்கால் மற்றும் கணுக்கால் ஆகியவற்றில் வலி உள்ளது. இது முதுகெலும்பு, கண்கள், தோல் மற்றும் குடல் ஆகியவற்றையும் பாதிக்கிறது. சோர்வு மற்றும் சோம்பல் ஏற்படுகிறது. ஸ்பான்டைலிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் , மூட்டுவலி காரணமாக இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள்.

மரபணு மாற்றம் ஒரு முக்கிய காரணம்

ஸ்பான்டைலிடிஸ் முக்கியமாக மரபணு மாற்றத்தால் ஏற்படுகிறது. HLA-B மரபணு உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு வைரஸ் மற்றும் பாக்டீரியா தாக்குதல்களை அடையாளம் காண உதவுகிறது, ஆனால் மரபணு பிறழும் போது,​​அதன் ஆரோக்கியமான புரதம் ஆரோக்கியத்தை பாதிக்கும் அம்சங்ளை அடையாளம் காண முடியாமல் போகிறது. மேலும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி உடலின் எலும்புகள் மற்றும் மூட்டுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும், இதற்கான சரியான காரணங்கள் இதுவரை அறியப்படவில்லை.

மருத்துவர்களிடம் ஆலோசனை பெறவும்

மூட்டுகளில் வலியின் புகார் இருக்கும்போது, ​​அது வயதுக்கு ஏற்ப அதிகரிக்கும் என்பதால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். HLA-B27 பரிசோதனை செய்வதன் மூலம் இந்த ஸ்பான்டைலிடிஸ் பாதிப்பு கண்டறியப்படுகிறது. HLA-B27 என்பது இரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியப்படும் ஒரு வகை மரபணு பரிசோதனை ஆகும். இதில், ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது. இது தவிர, எம்ஆர்ஐ சோதனை மூலம் ஸ்பான்டைலிட்டிஸ் பாதிப்பை அறியலாம்.

மேலும் படிக்க | Weight loss Tips: உடல் எடை குறைய தினசரி பழக்கத்தில் ‘சில’ சிறிய மாற்றங்களே போதும்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News