தலைமுடிக்கு தயிர் நன்மைகள் : தயிர் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். கால்சியம் மட்டுமின்றி, மக்னீசியம், வைட்டமின் பி5, வைட்டமின் டி, புரோட்டீன் போன்ற தனிமங்களும் தயிரில் உள்ளன. தயிரை சருமத்தில் பூசுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் தயிரை வைத்து தலை முடியை அலசுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஷாம்பூவுக்குப் பதிலாக, தயிர் கொண்டு தலையைக் கழுவினால், அது முடியை பளபளப்பாகவும், வலுவாகவும் மாற்றும். எனவே தயிர் கொண்டு முடியை அலசுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இன்று இங்கு தெரிந்து கொள்வோம்?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தயிரைக் கொண்டு முடியைக் கழுவுவதால் கிடைக்கும் நன்மைகள்


பொடுகை நீக்கும் - தயிரில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக, பொடுகு பிரச்சனையை நீக்க உதவுகிறது. பொடுகு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். அத்தகைய சூழ்நிலையில், இந்த சிக்கலில் இருந்து விடுபட, ஒரு சிறிய ஸ்பூன் கடலை மாவு மற்றும் அரை கப் தயிர் கலந்து பேஸ்ட் செய்யுங்கள். இப்போது அதை தலைமுடியில் 20 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் சாதாரண நீரினால் கழுவவும்.


மேலும் படிக்க | ஆரோக்கியத்திற்கான நம்பர் 1 ஜூஸ்: விலையும் மலிவு


கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கிறது - தயிர் முடியை வலுவாக்கும், அத்துடன் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது, முடியின் வளர்ச்சியை அதிகரிக்க, தயிரை மட்டும் கூந்தலில் தடவலாம். இது முடியை பலப்படுத்துகிறது மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.


அரிப்பு பிரச்சனையை குறைக்க - வானிலை மாற்றத்தால் பல நேரங்களில் தலையில் அரிப்பு ஏற்படும். ஆனால் அதிகப்படியான அரிப்பு உச்சந்தலையை சேதப்படுத்தும். தயிரைக் கொண்டு தலையைக் கழுவினால் அரிப்புப் பிரச்சனை வராது, விரும்பினால் தயிருடன் எலுமிச்சை கலந்தும் தடவலாம்.


ஹேர் மாஸ்க்- தயிரை கூந்தலுக்கு ஹேர் மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம். இதை பயன்படுத்த குளிப்பதற்கு சற்று முன் கூந்தலில் தயிரை தடவி விட்டு 30 நிமிடம் கழித்து தலையை நன்றாக அலசவும். இப்படி செய்தால் கூந்தல் வலுவடைவதோடு, பளபளப்பாகவும் மாறும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சருமத்தில் சொறி, அரிப்பு தொல்லையா? இந்த வீட்டு வைத்தியங்களால் நிவாரணம் பெறலாம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ