Detox Drinks for Kidney: நம் உடலின் சீரான செயலாக்கத்திற்கு பல உறுப்புகளின் செயல்பாடு மிக முக்கியம். அவற்றில் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரகம் நமது உடலின் ஒரு முக்கிய அங்கமாகும். இதில் சிறு பிரச்சனையோ, அல்லது செயலிழப்போ ஏற்பட்டால், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அது பாதிக்கும். ஆகையால் நாம் மிகுந்த பொறுப்புடன் சிறுநீரகத்தைப் பாதுகாக்க வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தினமும் டீ-காபி குடிப்பதாலும், பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதாலும், நம் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் அதிகமாக சேரத் தொடங்குகின்றன.  சிறுநீரகம் உடலில் உள்ள அழுக்கு மற்றும் நச்சுக்களை அகற்றும் பணியை செய்கின்றது. சிறுநீரக செயலிழப்பு காரணமாக, இந்த செயல்முறை தடைபடலாம். இதன் காரணமாக சிறுநீரகத்தில் நீண்ட காலத்திற்கு நச்சுகள் சேரும்.  இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. சிறுநீரகங்களில் உள்ள நச்சுகளை நீக்க உதவும் 5 ஆரோக்கியமான மற்றும் பயனுள்ள பானங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 பானங்கள் பற்றி இங்கே காணலாம்


எலுமிச்சைப்பழம்


காலையில் 2 கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1 எலுமிச்சை பழ சாறு கலந்து குடிப்பது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நல்லது. எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது. இது உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் உதவுகிறது.


அன்னாசி பழச்சாறு


ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் அன்னாசி பழச்சாறு குடிப்பது சிறுநீரகத்திற்கும் நன்மை பயக்கும். இதன் சாறு உடலில் நீர்ச்சத்து குறையாமல் சிறுநீரகத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. அன்னாசி பழச்சாறுடன் புதினா இலைகளையும் சேர்த்து ஜூஸ் செய்யலாம். புதினா அன்னாசி பழச்சாறை அதிக சத்தானதாக மாற்றும்.


மேலும் படிக்க | Lungs Detox: நுரையீரலில் சேரும் நச்சுக்களை நீக்க உதவும்... உணவுகளும் பழக்கங்களும்


பப்பாளி சாறு


பப்பாளியுடன் சாத்துக்குடியை சேர்த்து சாறு செய்து குடிக்கலாம். இந்த இரண்டு பழங்களும் சிறுநீரக நோய்களுக்கு ஒரு சஞ்சீவியாக கருதப்படுகின்றன. சிறுநீரக பிரச்சனையால் அவதியில் உள்ளவர்கள், இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து சாறு செய்து குடிக்கலாம். பப்பாளியில் சிறுநீரகத்தை சுத்தம் செய்ய உதவும் பாப்பைன் என்ற நொதி உள்ளது. சாத்துக்குடியில் வைட்டமின் சி உள்ளது. இது சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 


இஞ்சி மற்றும் எலுமிச்சை தேநீர்


இஞ்சி மற்றும் எலுமிச்சை இரண்டும் சிறுநீரகத்திற்கு நன்மை பயக்கும். இஞ்சி சிறுநீரக வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. எலுமிச்சை சிறுநீரகத்தை சுத்தமாக வைத்திருக்கும். இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இது உதவுகிறது. 1 கப் தண்ணீரில் 1 அங்குல இஞ்சி போட்டு கொதிக்க வைத்து, அதில் அரை எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.


தண்ணீர்


தண்ணீர் சிறுநீரகங்களுக்கு மிக முக்கியமான பானமாக கருதப்படுகின்றது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சிறுநீரகத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். சிறுநீரகத்தில் வடிகட்டும் பணியிலும் தண்ணீர் உதவுகிறது. தண்ணீர் சிறுநீரக நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. நாள் முழுவதும் குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிப்பது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவும்.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க... இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள IL-35 புரதம்...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ