ஜிம், டயட் எதுவும் இல்லாமல் வேகமாக எடை குறைக்க உதவும் மேஜிக் பானம்

Weight Loss Tips: ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக உடல் பருமனும் தொப்பை கொழுப்பும் அதிகமாகின்றது. தொப்பை கொழுப்பு மிக விரைவாக அதிகமாகி விடுகிறது, ஆனால், அதை குறைப்பது மிக கடினம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 6, 2024, 10:18 AM IST
  • ஒரு இயற்கை பானத்தின் மூலம் எளிதாக தொப்பை கொழுப்பை குறைக்கலாம்.
  • சீரகம், இலவங்கப்பட்டை, எலுமிச்சை ஆகியவை கொண்டு இந்த பானத்தை தயாரிக்க வேண்டும்.
  • இதை வெறும் வயிற்றில் உட்கொள்வது கண்டிப்பாக எடையைக் குறைக்க உதவும்.
ஜிம், டயட் எதுவும் இல்லாமல் வேகமாக எடை குறைக்க உதவும் மேஜிக் பானம்

Weight Loss Tips: உடல் பருமன் இந்த காலத்தில் பலரை வாட்டி வதைக்கும் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. நாம் அனைவருமே உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்புகிறோம். ஆனால், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக உடல் பருமனும் தொப்பை கொழுப்பும் அதிகமாகின்றது. தொப்பை கொழுப்பு மிக விரைவாக அதிகமாகி விடுகிறது. ஆனால், அதை குறைப்பது மிக கடினம். 

Add Zee News as a Preferred Source

உடல் எடை அதிகமானால் நமது ஆரோக்கியத்தில் அதன் தாக்கத்தை காண முடிகின்றது. உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். ஆனால், கடுமையான உடற்பயிற்சிகள், உணவு கட்டுப்பாடு என எதுவும் செய்யாமலேயே சில எளிய வழிகளிலும் உங்கள் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு எளிய இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஒரு இயற்கை பானத்தின் மூலம் எளிதாக தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து, உடல் உடையையும் குறைக்கலாம். சீரகம், இலவங்கப்பட்டை, எலுமிச்சை அல்லது ஆப்பிள் சைடர் வினிகர் ஆகியவை கொண்டு இந்த பானத்தை தயாரிக்க வேண்டும். இதை வெறும் வயிற்றில் உட்கொள்வது கண்டிப்பாக எடையைக் குறைக்க உதவும். இந்த பானத்தை குடிப்பதன் மூலம், சில வாரங்களில் உங்கள் எடையை பெருமளவு குறைக்க முடியும்.

எடையைக் குறைக்க தினமும் காலையில் இந்த பானத்தை குடிக்கலாம்

உடற்பயிற்சி இல்லாமல் வேகமாக உடல் எடையை குறைக்க இப்படிப்பட்ட பானங்கள் மிக உதவியாக இருக்கும் என சுகாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். இவற்றால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. உடல் எடையை குறைக்க உதவும் இந்த பானத்தை எப்படி தயார் செய்து குடிப்பது என இங்கே காணலாம். 

மேலும் படிக்க | Brain Stroke: மூளை பக்கவாதம்... அறிகுறிகளும்... வராமல் தடுக்க செய்ய வேண்டியவையும்!

எடை இழப்பு பானத்தை தயாரிக்க இப்படி செய்தால் போதும்:

சீரக நீர் தயாரிக்க, இலவங்கப்பட்டை, எலுமிச்சை அல்லது ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்தவும். இந்த நீரை தினமும் குடித்து வந்தால், உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பு குறையும். கலொரிகள் வேகமாக எரிக்கப்படுவதோடு, தொப்பை கொழுப்பும் கரையத் தொடங்கும். 

இந்த பானம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இது பசியைக் கட்டுப்படுத்துகிறது, அதன் மூலம் கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது. மேலும், இந்த பானம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றது. 

எடையைக் குறைக்க மேலும் சில எளிய வழிகள்

- தொப்பை கொழுப்பை குறைக்க தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீரைக் குடிக்கவும்.
- காலையில் பாலுடன் கூடிய தேநீர் அல்லது காபிக்கு பதிலாக, இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பது கலோரிகளை வேகமாக குறைக்க உதவும்.
- தினமும் மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு முன் பழங்கள் மற்றும் காய்கறி சாலட்களை சாப்பிடுவதை பழக்கப்படுத்திக்கொள்வது நல்லது. இதனால் உடலின் ஊட்டச்சத்து அதிகரிப்பதுடன் அதிகமாக சாப்பிடுவதும் தவிர்க்கப்படுகின்றது. 
- இரவு உணவுக்குப் பிறகு ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் சாறு உட்கொள்வது நல்லது. 
- தினமும் 8 முதல் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடப்பது நல்லது.
- தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பதும் போதுமான அளவு உறங்குவதும் உடல் பருமனை தவிர்க்க உதவும். 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஆண்களை அச்சுறுத்தும் புரோஸ்டேட் புற்றுநோய்: இந்த அறிகுறிகள் அலர்ட் ஆகிடுங்க!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News