இதயத்தை பாதுகாப்பாக காக்க உதவும் பழங்கள் : தினமும் சாப்பிடுங்க
Best Fruits for Heart Health: நம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் இதயமும் ஒன்று. இதயம் இயங்கும் வரைதான் நாம் இருப்போம்.
Best Fruits for Heart Health: நாளுக்கு நாள் மாரடைப்புக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, சுகாதாரமற்ற உணவு, பதற்றம், அழுத்தம், இறுக்கம் என இவை அனைத்தும் நம் வாழ்வில் அதிகரித்து வருகின்றன. இப்படி ஒரு நிலையில், நம் இதயத்தை மிக பாதுகாப்பாக பேணி பாதுகாக்க வேண்டியது மிக அவசியமாகும்.
நம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் இதயமும் ஒன்று. இதயம் இயங்கும்வரைதான் நாம் இருப்போம். ஆகையால் இதயத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம். இதயத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், அது உடலையும் பலவீனப்படுத்துகிறது. இதய பிரச்சனைகள் உடலுக்கே கூட ஆபத்தாக அமையலாம்.
முன்னர் வயதானவர்களுக்கும், அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கும் மட்டுமே ஏற்பட்ட இதய நோய்கள் இப்போது அனைத்து வயதினரையும் பாதிக்கின்றது. நாளுக்கு நாள் இதய நோய்களின் ஆபத்து அதிகரித்து வருகின்றது. மார்பு வலி, விறைப்பு, அழுத்தம், அமைதியின்மை, சுவாசிப்பதில் சிரமம், கழுத்து, தாடை, தொண்டை, மேல் வயிறு அல்லது முதுகு ஆகிய பகுதிகளில் வலி, கால்கள் அல்லது கைகளில் வலி, உணர்வின்மை போன்றவை பலவீனமான இதயத்தின் அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றன.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த இதய பாதுகாப்பை உறுதி செய்யும் உணவுகளை தேர்தெடுத்து உட்கொள்ள வேண்டும். இவற்றில் முதன்மையானவை பழங்கள். பழங்கள் சுவையானவையாக இருப்பதோடு இதயத்திற்கும் இவை அதிக அளவில் நன்மை பயக்கும். தமனிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் சாப்பிட வேண்டிய பழங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பெர்ரி (Berries)
பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. இது இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. அவற்றில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொழுப்பின் அளவை சீராக வைத்திருக்கவும் உதவுகின்றன. தினமும் ஒரு கைப்பிடி பெர்ரிகளை உட்கொள்வதால் இதயத் தமனிகள் வலுவடையும்.
மேலும் படிக்க | கொழுப்புக்கு குட்பை: கெட்ட கொலஸ்ட்ராலை அடியோடு விரட்டும் ஆரோக்கியமான உணவுகள்
ஆப்பிள் (Apple)
ஆப்பிள் பல வித ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய பழமாகும். இதில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆப்பிளை உட்கொள்வது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பதோடு மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது. காலை உணவில் அல்லது சிற்றுண்டியாக இதை உட்கொள்ளலாம்.
வாழைப்பழம் (Banana)
வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் இதய நோய் அபாயம் குறைகிறது. இது செரிமானத்தையும் சீராக்குகிறது. இது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் ஒரு ஆற்றல் மூலமாகவும் உள்ளது. இதை உட்கொள்வதன் மூலம் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
மாதுளை (Pomegranate)
மாதுளையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளன. இவை இதயத்தின் தமனிகளுக்கு அதிக அளவில் நன்மை பயக்கும். மாதுளம் பழச்சாறு குடிப்பதால் இரத்த ஓட்டம் மேம்படும். இதுமட்டுமின்றி இதனால் தமனிகளில் வீக்கம் குறைகிறது.
மேலும் படிக்க | 50 வயதுக்கு மேலும் எலும்பு இரும்பு போல் இருக்க உதவும் சூப்பர் உணவுகள் இதோ
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ