Weight Loss Tips: இந்த நவீன உலகில் பல வாழ்க்கை முறை பிரச்சனைகள் நம்மை ஆட்கொள்கின்றன. கொலஸ்ட்ரால், நீரிழிவு நோய், உடல் பருமன் என இவற்றின் பட்டியல் மிக பெரியது. பெரும்பாலும் இவை ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டும் இருக்கின்றன. ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக உடல் பருமனால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிக வேகமான அதிகரித்து வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொப்பை கொழுப்பு பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. தொப்பையை குறைக்க, சரியான உணவு மற்றும் உடற்பயிற்சி இரண்டும் முக்கியம். கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. மேலும், உணவில் குறைந்த கலோரி உணவுகளைச் சேர்ப்பது தொப்பையை எளிதில் குறைக்க உதவும். 


உடல் எடையை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய பணியாக உள்ளது. குறிப்பாக, தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைப்பது பிரம்ம பிரயத்னமாகவே பார்க்கப்படுகின்றது. உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும், சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.


தொப்பையை குறைப்பதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தொப்பையை குறைக்க உதவும் சில ஆரோக்கியமான பழங்கள் பற்றி இங்கே காணலாம்.


பெர்ரி


அவுரிநெல்லி, ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் ராஸ்பெர்ரிகள் போன்ற பெர்ரி வகை பழங்களில் கலோரிகள் குறைவாகவும், ஆண்டி-ஆக்சிடெண்டுகள் அதிகமாகவும் உள்ளன. பெர்ரி பழங்கள் நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகளின் நல்ல மூலமாகவும் பார்க்கப்படுகின்றன. இது வீக்கத்தைக் குறைக்கவும் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரி ஆகியவை தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவும் பெர்ரிகளில் சிலவாகும்.


திராட்சை


திராட்சை உடல் பருமனுக்கு மட்டுமல்லாமல், நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நன்மை பயக்கும். இது இன்சுலின் அளவைக் குறைக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவும். சிவப்பு மற்றும் கருப்பு திராட்சைகளில் எலாஜிக் அமிலம் உள்ளது. திராட்சையில் உள்ள ரெஸ்வெராட்ரோல், அந்தோசயனின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடல் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதன் மூலம் வேகமாக உடல் எடை குறைகின்றது. 


அன்னாசிப்பழம்


அன்னாசிப்பழத்தில் ப்ரோமிலைன் உள்ளது. இது செரிமானத்தை சீராக்கி, வயிற்று வலி மற்று வயிறு தொடர்பான பிற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. இது தவிர, இதில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் நீர் உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. 


மேலும் படிக்க | வாட்டி எடுக்கும் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட... சில வீட்டு வைத்தியங்கள்


தர்பூசணி


நீர்ச்சத்து அதிகமாக உள்ள தர்பூசணியில் கலோரிகள் குறைவாக உள்ளன. நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், உடல் எடையை குறைக்க இது பெரிய அளவில் உதவுகின்றது. 


அவகேடோ


அவகேடோ பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. இதை உட்கொள்வதால் பசி கட்டுக்குள் இருக்கின்றது. இதன் மூலம் தேவையற்ற ஆரோக்கியமற்ற உண்வுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. இது பசியைக் கட்டுப்படுத்தவும், எடையைக் குறைக்கவும் உதவுகிறது.


கிவி


கிவி பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து உள்ளன. இவை செரிமானத்திற்கு உதவுகின்றன. கிவி பழம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது. 


ஆப்பிள்


ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. இது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க உதவுகிறது. ஆப்பிளில் அதிகப்படியான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இவை உடலை பல வித உடல் உபாதைகளிலிருந்து காக்க உதவுகின்றன. 


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | காலையில் எழுந்ததும் வயிற்றெரிச்சல் தொந்தரவு செய்கிறதா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ