ஓமம் சமையலறையில் எளிதில் கிடைக்கும் ஒரு பொருளாகும். ஓமத்தில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதனால் உடல் ஆரோக்கியத்துக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கீல்வாத நோயிலும் கற்பூரவல்லி இலைகள் மிகப்பெரிய நன்மைகளை அளிக்கும். மூட்டுவலி பிரச்சனை உள்ளவர்கள், கண்டிப்பாக இந்த இலைகளை பயன்படுத்தலாம். இது உங்கள் வலிக்கு நிவாரணம் தரும். கற்பூரவல்லி  இலைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது மூட்டுவலியை சரி செய்ய உதவும். 


பழைய வலிகளும் கட்டுப்படும்


கீல்வாதத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும் வலி நிவாரணி குணங்கள் கற்பூரவல்லி இலைகளில் உள்ளன. கீல்வாத வலிக்கு கற்பூரவல்லி இலைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் மூட்டு வலிக்கு நிவாரணம் வழங்குவதைத் தவிர அதன் மற்ற நன்மைகளைப் பற்றியும் இந்த பதிவில் காணலாம். 


மேலும் படிக்க | பீட்ரூட் ஜூஸை தினமும் குடிப்பதால் இத்தனை நன்மைகளா 


சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்


மூட்டு வலியைத் தவிர, கற்பூரவல்லி இலைகள் உடலில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் பிரச்சனை இருந்தால், நீங்கள் கற்பூரவல்லி இலைகளை உட்கொள்ள வேண்டும். நாட்டில் பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. அத்தகைய சூழ்நிலையில், கற்பூரவல்லி இலைகள் இவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.


கற்பூரவல்லி இலைகளை எவ்வாறு பயன்படுத்துவது


கற்பூரவல்லி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். பின்னர் அந்த நீரில், வலி உள்ள மூட்டின் பகுதியை நனையும் படி வைக்கவும். 5-10 நிமிடங்களுக்கு அப்படியே இருக்கவும். 


கற்பூரவல்லி போட்டு கொதிக்க வைத்த நீர், பொதுவாக மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர்களிடம் காணப்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Grey Hair: நரை முடி பிரச்சனையைத் தீர்க்கும் எளிய வீட்டு வைத்தியங்கள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR