புதுடெல்லி: வயதாகும்போது மூட்டு வலி பிரச்னையும் அதிகரிக்கிறது. மூட்டுவலி நோயாளிகளின் பொதுவான பிரச்சனை மூட்டு வலி மற்றும் வீக்கம் ஆகும். மாறிவரும் வாழ்க்கை முறையில் உணவு, பானங்களில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் மூட்டு வலி போன்ற எந்த வித பிரச்சனையும் வராது. இது தவிர உணவில் சில பழங்களை உட்கொண்டால் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
ஆரஞ்சு சாப்பிட வேண்டும்
ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதன் மூலம் மூட்டு வலி மற்றும் வீக்கம் குறையும். ஆரஞ்சு பழத்தில் நல்ல அளவு வைட்டமின்-சி உள்ளது. இந்த பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை அதிக அளவில் குறைக்கிறது. மூட்டுவலி நோயாளிகள் ஆரஞ்சு, சாத்துக்குடி மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிட வேண்டும்.
மேலும் படிக்க | Vitamin D பற்றாக்குறை கொரோனா நோயாளிகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
தர்பூசணி சாப்பிட்டாலும் மூட்டு வலி வராது
இது தவிர, இரண்டாவது பழம் தர்பூசணி. இதை சாப்பிடுவதும் பலன் தரும். உண்மையில், தர்பூசணியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் கரோட்டினாய்டு பீட்டா-கிரிப்டோசாந்தின் உள்ளது, இது மூட்டுவலி நோயாளிகளுக்கு நல்லது. இது வீக்கத்திலிருந்து விடுபட உதவுகிறது. தர்பூசணி குறிப்பாக முடக்கு வாதம் உள்ள நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
திராட்சை கூட நன்மை பயக்கும்
இதனுடன் திராட்சையையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை சாப்பிடுவதால் பெரிய நன்மைகளும் உண்டு. இது மூட்டு வலியை குறைக்கிறது. ஊடக அறிக்கைகளின்படி, திராட்சை தோல்களில் ரெஸ்வெட்ரோல் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது, இது மூட்டுவலி நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR