கொழுப்பு கல்லீரல் பிரச்சனையா? வெறும் வயிற்றில் இந்த சாறு குடித்தால் நிவாரணம் கிடைக்கும்
Juice To Cure Fatty Liver: கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள 5 சாறுகளை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது இந்த பிரச்சனைக்கு நிவாரணமாக அமையலாம்.
Juice To Cure Fatty Liver: இன்றைய காலகட்டத்தில் கொழுப்பு கல்லீரல் பிரச்சனை மிகவும் பொதுவானதாகி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களில் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையே இதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கொழுப்பு கல்லீரல் பிரச்சனை இருப்பது தெரிந்தால், விரைவாக அதற்கான சிகிச்சையை எடுக்கத் தொடங்கவேண்டியது மிக அவசியமாகும். ஏனெனில், கல்லீரலில் படிந்திருக்கும் இந்த கொழுப்பு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கல்லீரல் செயலிழப்பு ஆகிய அபாயங்களை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள 5 சாறுகளை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது இந்த பிரச்சனைக்கு நிவாரணமாக அமையலாம்.
பீட்ரூட் சாறு
பீட்ரூட் சாறு (Beetroot Jucie) உடலில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களின் அளவை அதிகரிக்கிறது. இது கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. பீட்ரூட்டில் பீடைன் உள்ளது. இது வீக்கத்தைக் குறைக்கவும் கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்கவும் உதவுகிறது. இதனை வெறும் வயிற்றில் குடிப்பதால் கொழுப்பு கல்லீரல் நோய் குணமாகும், கல்லீரல் பலமாகும்.
எலுமிச்சை மற்றும் இஞ்சி சாறு
எலுமிச்சை (Lemon) மற்றும் இஞ்சி (Ginger) கலவையானது கொழுப்பு கல்லீரலுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி, அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. இவை கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்க உதவும். இஞ்சி செரிமான அமைப்பை பலப்படுத்தி, நச்சுகளை அகற்றி கல்லீரல் நோய்களில் இருந்து மீள்வதை எளிதாக்குகிறது. இஞ்சி எடை இழப்பிலும் உதவியாக இருக்கின்றது.
மஞ்சள் நீர்
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகள் நிறைந்துள்ளன. மஞ்சள் நீர் (Turmeric Water) கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள குர்குமின் பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் தண்ணீரைக் குடிப்பது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
கேரட் சாறு
கேரட்டில் பீட்டா கரோட்டின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. கேரட் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிய அளவில் உதவுகின்றது. வெறும் வயிற்றில் கேரட் சாறு (Carrot Jucie) குடிப்பது கொழுப்பு கல்லீரலை குணப்படுத்த உதவுகிறது. இது கண்களின் ஆரோக்கியத்திற்கும் இரத்த சோகை பிரச்சனையை சரிசெய்யவும் ஏற்றது.
வீட்கிராஸ் சாறு
வீட்கிராஸ் சாறு (Wheatgrass Jucie) கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது. இதுமட்டுமின்றி, இதில் உள்ள குளோரோபில் கல்லீரல் செல்களை சீராக்க உதவுகின்றன. இதன் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக, கொழுப்பு கல்லீரல் நோயாளிகள் இதை வெறும் வயிற்றில் குடிப்பது அதிக அளவில் நன்மை பயக்கும்.
இந்த சாறுகளுடன் கண்டிப்பாக மருத்துவர்கள் அளிக்கும் மருந்துகளை உட்கொண்டு அவர்களது ஆலோசனையை பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஓவர் எடையை சுலபமா குறைக்க இந்த பானங்களை குடிச்சா போதும்: ஒல்லி பேல்லி கேரண்டி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ