)
Cholesterol Control Tips: இன்றைய நவீன உலகில் பல வித வாழ்க்கை முறை நோய்கள் நம்மை ஆட்கொண்டு பாடாய் படுத்துகின்றன. அதிக கொலஸ்ட்ரால், நீரிழிவு நோய், உடல் பருமன், யூரிக் அமில அளவில் அதிகரிப்பு என இவை அனைத்தும் சமீபத்திய சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளன. அதுவும் கொலஸ்ட்ரால் பிரச்சனை மிக வேகமாக பலரிடம் அதிகரித்து வருகின்றது.
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் இன்னும் பல வித உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன. உயர் கொலஸ்ட்ரால் மாரடைப்பு, பக்கவாதம், இதய கோளாறுகள் ஆகியவற்றுக்கும் நுழைவாயிலாக அமைகின்றது. நரம்புகளில் படிந்திருக்கும் கொலஸ்ட்ரால் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கின்றது.
நரம்புகளில் கெட்ட கொலஸ்ட்ரால் (Cholesterol) சேர்வதால், இரத்தம் வழங்கும் நரம்புகள் தடைபடுகின்றன. நரம்புகளில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குவிக்கும் பல உணவுகள் உள்ளன. அவற்றைப் பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் இந்த உணவுகளிலிருந்து விலகி இருக்க வேண்டியது மிக அவசியம்.
நரம்புகளில் கொலஸ்ட்ரால் சேருவதற்கு காரணமாக இருக்கும் உணவுகள்:
ஐஸ்கிரீம்
ஐஸ்கிரீம் அதிகமாக உட்கொள்வது கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில், 100 கிராம் வெண்ணிலா சுவை கொண்ட ஐஸ்கிரீம் உடலில் 41 மில்லிகிராம் கொழுப்பை அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. அதிக அளவில் ஐஸ்கிரீம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும், ஐஸ்கிரீம் (Ice Cream) உட்கொண்டால், சிறிது நேரம் கழித்து, வெந்நீர் குடிப்பது நல்லது.
தேநீர்-பிஸ்கட்
தேநீருடன் பிஸ்கட் (Tea Biscuit) சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. ஆஸ்திரேலியாவின் அரசு சுகாதார இணையதளத்தில், பிஸ்கட்கள் பதப்படுத்தப்பட்ட வடிவத்தில் தயாரிக்கப்படுவதால், அவை நரம்புகளைத் தடுக்கக்கூடிய நிறைவுற்ற கொழுப்புகளைக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வறுத்த கோழி, பக்கோடா
பொரித்த கோழி, பக்கோடா போல, எண்ணெயில் பொரித்த உணவுகளை (Fried Food) சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவை ஆழமாக வறுக்கப்படுகின்றன. இதன் காரணமாக இவை நரம்புகளில் கெட்ட கொலஸ்ட்ராலாக சேர்கின்றன. கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்கள் இவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பர்கர்-பீட்சா
இன்றைய காலத்தில், பர்கர் (Burger), பீட்சா, பாஸ்தா போன்ற நொறுக்குத் தீனிகளை அனைவரும் அதிகம் சாப்பிடுகிறார்கள். இவை வெண்ணெய், கிரீம், பாலாடைக்கட்டி ஆகியவற்றால் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் நரம்புகளில் கொலஸ்ட்ராலைக் குவிக்கக்கூடியவை. ஆகையால் இவற்றை மிக குறைவாக சாப்பிடுவதும், முடிந்தால், சாப்பிடாமல் இருப்பதும் நல்லது.
வெண்ணெய், நெய்
வெண்ணெய் (Butter) சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என ஏசிபி ஜர்னலின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நரம்புகளில் குவிந்துவிடும். இதன் காரணமாக கரோனரி தமனி தடைபடுகிறது. கொலஸ்ட்ரால் நோயாளிகள் வெண்ணெய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ