முட்டை உடன் இந்த 5 காய்கறிகளை சேர்த்து சாப்பிட்டால்... ருசியும் கிடைக்கும், ஊட்டச்சத்தும் கிடைக்கும்!
Health Tips: முட்டையுடன் இந்த 5 காய்கறிகளையும் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும். அந்த 5 காய்கறிகள் என்னென்ன என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Health Tips In Tamil, Eggs And Vegetables: உடலுக்கு தேவையான ஆரோக்கியமானகொழுப்புகள் மற்றும் உயர் தரமான புரதச்சத்து, பல்வேறு வகையான வைட்டமிண்கள், கனிமங்களை கொண்டதுதான் முட்டை. முட்டை சைவமா, அசைவமா என்ற விவாதம் மறைந்து அதில் உள்ள ஊட்டச்சத்துகள் வேண்டும் என்பதற்காகவே பலரும் தங்களின் அன்றாட உணவுகளில் சேர்த்துக்கொள்கின்றனர்.
முட்டை நீங்கள் வேகவைத்து, அதை உடைத்து ஆம்லேட்டாகவோ, பொரியல் செய்தோ அல்லது பச்சையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் முறையாக வேகாமல் இருக்கும் ஆப்-பாயில் போன்று அடிக்கடி உண்ணக்கூடாது என கூறப்படுகிறது. முட்டையிலே அதிக ஊட்டச்சத்து இருந்தாலும் அதனை சில காய்கறிகளோடு சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கூடுதல் நன்மை கிடைக்கும்.
முட்டைகளுடன் இந்த காய்கறிகளை சேர்த்து சாப்பிட்டால் கூடுதலாக ஆண்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து உள்ளிட்டவை கிடைக்கும். காய்கறிகள் அந்த முட்டையின் சுவையையும் கூட்டும். முட்டையுடன் முறையாக இந்த காய்கறிகளை சேர்த்தால் தோல் ஆரோக்கியத்திற்கு உதவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும், செரிமானத்தை சீராக்கும், இதய ஆரோக்கியத்தையும் நலமாக்கும். அந்த வகையில் முட்டையுடன் சேர்த்து சாப்பிடத்தக்க காய்கறிகள் குறித்து இதில் காணலாம்.
மேலும் படிக்க | தீராத தலைவலியா... மாத்திரை வேண்டாம்... இந்த வீட்டு வைத்தியங்கள் கை கொடுக்கும்
முட்டையுடன் தக்காளி
தக்காளியில் வைட்டமிண் சி அதிகம் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். மேலும் உடல் இரும்புச்சத்தை அதிகமாக உள்ளிழுத்துக்கொள்ளும். முட்டையில் இரும்புச்சத்தும் இருக்கிறது. இதில் உள்ள ஆண்டிஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை சீராக்கும், ரத்த நாளங்களையும் பாதுகாக்கும்.
முட்டையுடன் அவகாடோ
இது பழம் என்றாலும் கூட சமையலில் காய்கறியாகவும் பயன்படுத்தலாம். இது முட்டையுடனும் சேர்த்து சாப்பிடலாம். இதில் நிறைவுற்ற கொழுப்புகள் இருப்பதால் இதயத்திற்கும் நல்லது. அதில் நார்ச்சத்து, பொட்டாஸியம், ஃபோலேட் உள்ளிட்டவை செரிமானத்திற்கும், தசைகளுக்கும், செல் வளர்ச்சிக்கும் முக்கியமானது.
முட்டையுடன் கீரை
முட்டையுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு ஏதுவான ஒன்று கீரையாகும். இதிலும் சிறந்த ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. குறிப்பாக, இரும்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமிண் ஏ, சி, கே உள்ளிட்டவை உள்ளன.
முட்டையுடன் குடை மிளகாய்
இதிலும் அதிகளவு வைட்டமிண் சி உள்ளது. இது உடலில் கொலஜென் சேர்க்கையை அதிகப்படுத்தி சரும பாதுகாப்பை வழங்கும், நோய் எதிர்ப்பு சக்தியும் வலுவாகும். beta-carotene உள்ளிட்ட பல ஆண்டிஆக்ஸிடன்ட்கள் குடை மிளகாயில் உள்ளதால் கண்ணுக்கும் நன்மையை அளிக்கும்.
முட்டையுடன் காளான்
காளானுடன் முட்டையை சேர்த்து சாப்பிட்டால் அந்த உணவு ருசியாகவும் இருக்கும், ஊட்டச்சத்து நிறைந்தும் இருக்கும். காளானில் வைட்டமிண் டி இருக்கிறது. இது எலும்பு ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகும். காளானில் வைட்டமிண் உள்ளது, இது வளர்சிதை மாற்றத்தை தூண்டும். உடலுக்கு ஆற்றலையும் வழங்கும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவையாகும். இதனை பின்பற்றும் முன் முறையான மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ