Diabetes Control Tips: உலகம் முழுவதும் நீரிழிவு நோய் பலரை தன் பிடியில் சிக்க வைத்துள்ளது. இந்தியா நீரிழிவு நோயின் தலைநகரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கு ஏராளமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணமாகும். உலகத்தில் உள்ள இளைஞர்களில் 20 வயது முதலானவர்களில் சுமார் 10% பேர் வரை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலருக்கு தங்களுக்கு இந்த நோய் இருப்பது கூட தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதை தடுப்பது மிக அவசியமாகும். இதற்கான அறிகுறிகள் பற்றிய புரிதல் அனைவருக்கும் இருக்க வேண்டும்.
நீரிழிவு நோயின் வகைகள்
டைப்-1 மற்றும் டைப்-2 நீரிழிவு நோய் என நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உள்ளன. இவற்றில் டைப்-2 மிகவும் கொடியது. நீரிழிவு நோயில், உடலில் உள்ள இன்சுலின் அளவின் சமநிலை கெட்டு விடுகின்றது. டைப்-1 இல், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக இன்சுலின் உற்பத்தி செய்யப்படுவதில்லை. டைப்-2 இல், இன்சுலின் உற்பத்தி செய்யப்படுகிறது, ஆனால் அதிக அளவு குளுக்கோஸ் காரணமாக, உடலின் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.
இது தவிர, சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உடலில் இன்சுலின் உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்படுகின்றது. இது கர்ப்பகால நீரிழிவு என்று அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோய் ஒரு வாழ்க்கை முறை நோயாகும். இதை தவிர்க்கவும், கட்டுப்படுத்தவும் தினசரி வழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்வது அவசியம். இந்த மாற்றங்களால் சர்க்கரை நோயை பெருமளவு கட்டுக்குள் வைக்க முடியும்.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சில எளிய வழிகள் பற்றி இங்கே காணலாம்:
ஆரோக்கியமான உணவு:
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த ஆரோக்கியமான உணவை (Balanced Diet) உட்கொள்ள வேண்டியது மிக அவசியம். இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத, குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகளை உட்கொள்வது நல்லது. குறைந்த கொழுப்பு பால் பொருட்கள், குறைந்த கலோரி உணவுகள், முழு தானியங்கள், காய்கள் ஆகியவற்றை அவ்வப்போது உண்ணலாம்.
உடல் செயல்பாடு:
உடற்பயிற்சிகள் (Exercise) எதையும் மேற்கொள்ளாமல், ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தால், சர்க்கரை நோய் மட்டுமல்ல, உடல் பருமன், கொலஸ்ட்ரால் போன்ற கடுமையான பிரச்சனைகளும் நம்மை ஆட்கொள்ளும். டைப் 1 மற்றும் 2 நீரிழிவு நோயாளிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் சில உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். உடலில் போதுமான செயல்பாடுகள் இருந்தால் இரத்த ஓட்டம் மேம்படும்.
கண்காணிப்பு:
வாழ்க்கைமுறையை மாற்றுவதன் மூலம் சர்க்கரையை அதிக அளவில் கட்டுப்படுத்த முடியும். எனினும், அவ்வப்போது இரத்த சர்க்கரை அளவை பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் அது அதிகரிக்காமல் தவிர்க்க முடியும். டைப்-1 நோயாளிகள் தினமும் சர்க்கரை அளவை கண்காணித்தால், டைப்-2-ல் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
எடை கட்டுப்பாடு:
உடல் எடை அதிகரித்தால், அதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். உடல் பருமனும் சர்க்கரை நோக்கு ஒரு காரணமாகலாம். தினமும் உடற்பயிற்சி செய்வதும் உணவு கட்டுப்படும் உடல் எடையை குறைக்க (Weight Loss) உதவும்.
வெந்தய நீர்:
வெந்தய நீர் (Fenugreek Water) குடிப்பதன் மூலம் நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தலாம். இதற்கு, இரவில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை 1 கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கிராம்பு செய்யும் மேஜிக்... காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்க - அப்புறம் பாருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ