மாரடைப்பு வராமல் காக்கும் சூப்பர் உணவுகள்: மருத்துவரே பகிர்ந்த தகவல்
Superfoods To Avoid Heart Attack: இதய நோய்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளன. சமீப காலங்களில் இதய நோய்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும்.
Superfoods To Avoid Heart Attack: நம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் இதயமும் ஒன்று. இதயம் இயங்கும்வரைதான் நாம் இருப்போம். ஆகையால் இதயத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். இதயத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், அது உடலையும் பலவீனப்படுத்துகிறது. இதய பிரச்சனைகள் உடலுக்கே கூட ஆபத்தாக அமையலாம்.
இதய நோய்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளன. சமீப காலங்களில் இதய நோய்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும். அதுவும் பலர் மாரடைப்பால் பாதிக்கப்படுவதை நாம் காண்கிறோம். மாரடைப்பு மனிதர்களின் தவறுகளால் ஏற்படும் ஒரு நோய். கடந்த சில தசாப்தங்களில், நமது வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்கள் மிகவும் மோசமடைந்துள்ளன. மேலும், உடல் செயல்பாடுகளும் குறைந்துள்ளன. மக்கள் இயற்கையான பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்து பேக் செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடத் தொடங்கிவிட்டனர். இவை அனைத்துமே இதய பிரச்சனைகளுக்கு காரணங்களாக அமைகின்றன.
மாரடைப்பு வராமல் இருக்க என்ன சாப்பிட வேண்டும்?
டாக்டர் விகாஸ் குமார் தனது எக்ஸ் கணக்கில் மாரடைப்பைத் தவிர்க்க விரும்பினால், உணவில் சேர்க்கக்கூடிய 5 சூப்பர் உணவுகளை பற்றி கூறியுள்ளார். இருதயநோய் நிபுணர் டாக்டர் எம் சிங்கை மேற்கோள் காட்டி அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
வயதானவர்கள் மட்டுமின்றி, இளைஞர்கள் இடையேயும் மாரடைப்பு பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இந்த முக்கிய உறுப்பை கவனித்துக்கொள்வது நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும். டிரான்ஸ் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகள் மாரடைப்பை ஏற்படுத்தும். மேலும், குறைந்த சோடியம், அதிக நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், ஆண்டி-ஆக்சிடெண்டுகள், பருப்பு வகைகள் மற்றும் விதைகள் கொண்ட உணவு, வீக்கம் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைத்து மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.
இவற்றை உட்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கும் உடல் நலத்திற்கும் நல்லது
1. அவகேடோ
அவகேடோ (Avocado)பழத்தில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது, இது உடலில் இருந்து கெட்ட கொழுப்பை நீக்குகிறது. இதன் காரணமாக பிளேக் உருவாகும் அபாயத்தையும் உயர் இரத்த அழுத்தத்தையும் இது குறைக்கிறது. இதய ஆரோக்கியத்தைத் தவிர, அவகேடோ புற்றுநோய், மூட்டுவலி, மனச்சோர்வு / பதற்றம் மற்றும் வீக்கத்தைத் தடுக்கவும் உதவுகிறது.
2. விதைகள்
சியா விதைகள், ஹெம்ப் விதைகள் (Seeds), ஆளி விதைகள், பூசணி விதைகள், வால்நட் போன்றவற்றில் நார்ச்சத்து, ஆண்டி-ஆக்சிடெண்டுகள் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளன. இவை மாரடைப்புக்கான அபாயத்தை பல மடங்கு குறைக்கின்றன.
3. இலவங்கப்பட்டை
பல வித ஆரோக்கிய நன்மைகள் அடங்கின மசாலாவான இலவங்கப்பட்டை (Cinnamon), கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவை குறைக்கிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
4.திராட்சை
திராட்சை (Grapes) இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பொட்டாசியத்தின் களஞ்சியமாக கருதப்படுகின்றது. குவெர்செடின் மற்றும் ரெஸ்வெராட்ரோல் போன்ற பாலிபினால்கள் உள்ளிட்ட சிறந்த ஆண்டி-ஆக்சிடெண்டுகள் இவற்றில் உள்ளன. இவை மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. திராட்சை விதை எண்ணெயில் லினோலிக் அமிலம் உள்ளது. இது இதய பிரச்சனைகளைத் தடுக்கிறது.
5. அக்ரூட் பருப்பு
அக்ரூட் பருப்புகளில் (Walnuts) ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், குறிப்பாக ஆல்பா-லினோலெனிக் அமிலம் அதிகமாக உள்ளது. இது இதயத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இதுமட்டுமின்றி இது இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | எச்சரிக்கை! முள்ளங்கியுடன் சாப்பிடக் கூடாத சில உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ