பச்சை இலைக் காய்கறிகளை உண்ணும் போது, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ளவற்றையும் சேர்க்க மறக்காதீர்கள். அவற்றில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது, இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. பீட்டா கரோட்டின் கொண்ட காய்கறிகளை உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வண்ணங்களில் உள்ளன. ஒரே காய், பல நிறங்களில் இருப்பதை பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீட்டா கரோட்டின்


உதாரணமாக கத்தரிக்காய் எத்தனை வண்ணங்களில் விளைகிறது என்று நினைத்து ப்பாருங்கள். வெள்ளை நிற கத்திரிக்காய், பச்சை நிற கத்திரிக்காய், வயலெட் நிற கத்தரிக்காய் என்று வெவ்வேறு வண்ணங்களில் ஒரே காய் கிடைக்கிறது.



இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரே காயின் அடிப்படை குணநலன்கள் ஒன்றாக இருந்தாலும், அவற்றின் நிறம் மருத்துவ பண்புகள் உள்ளிட்ட பல விஷயங்களில் மாற்றத்தைக் கொண்டுள்ளது. அதேபோலத் தான், வெவ்வேறு வண்ணங்களில் பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம், ஊதா, வெள்ளை என பல்வேறு நிறங்களில் கிடைக்கும் காய்கறிகள் அனைத்துமே ஏதேனும் ஒரு  அடிப்படையில் நமக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. 


வண்ணமயமான உணவு நம் உடலுக்கு சிறந்தது என்பதால் தான், வானவில் நிறத்தில் உணவை உண்ணுங்கள் (eat the rainbow) என்று சொல்லும் ஒரு கருத்தாக்கம் நிலவுகிறது. கீரை, கேரட், தக்காளி மற்றும் ப்ரோக்கோலி போன்ற காய்கறிகள் அனைத்தும் சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சூப்பர்ஃபுட்களில் உள்ள பொதுவான விஷயம் பீட்டா கரோட்டின், இது நமது உடலுக்கு மிகவும் அவசியமானது.


மேலும் படிக்க | இனிப்பு உணவே பிடிக்காதாவர்களுக்கும் டயபடீஸ்! நீரிழிவுக்கும் சர்க்கரைக்கும் என்ன சம்பந்தம்?


பீட்டா கரோட்டின் என்றால் என்ன?
பீட்டா கரோட்டின் என்பது இயற்கையான நிறமி மற்றும் ஆக்ஸிஜனேற்றியாகும், இது கரோட்டினாய்டுகள் எனப்படும் சேர்மங்களின் குழுவிற்கு சொந்தமானது. ஆரஞ்சு, மஞ்சள், சிவப்பு மற்றும் சில நேரங்களில் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களில் பீட்டா கரோட்டின் காணப்படுகிறது. இந்த சத்து உள்ள உணவை நாம் உண்டால், நமது உடல் அதை வைட்டமின் ஏ ஆக மாற்றுகிறது, இது நம் ஆரோக்கியத்திற்கு அவசியமானதாகும்.
 
பீட்டா கரோட்டின் ஆரோக்கிய நன்மைகள்  
பீட்டா கரோட்டின் நமது ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும். கண்கள் முதல் சருமம் வரை அது நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.


கண் ஆரோக்கியம்
விழித்திரையின் சரியான செயல்பாட்டிற்கு அவசியமான வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுவதால், பார்வைத்திறனை பராமரிக்க பீட்டா கரோட்டின் முக்கியமானது.


ஆக்ஸிஜனேற்ற பாதுகாப்பு
பீட்டா கரோட்டின் ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது, உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகிறது, இது இதயம் உட்பட நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | உச்சி முதல் பாதம் வரை: சீரகத்தின் அதிசய வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்


நோயெதிர்ப்பு 
வலுவான நோயெதிர்ப்பு அமைப்புக்கு பங்களிக்கும் பீட்டா கரோட்டின், நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிராக நமது உடலின் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.


அறிவாற்றல் மேம்பாடு
அறிவாற்றல் செயல்பாட்டில் பீட்டா கரோட்டின் எந்த வகையில் பங்களிக்கிறது என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். வைட்டமின்கள் சி மற்றும் ஈ மற்றும் துத்தநாகம் போன்ற அதிக ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொண்ட ஊட்டச்சத்துக்களுடன் பீட்டா கரோட்டின் இணையும்போது, கற்றல், மொழி, நினைவகம் மற்றும் பல்வேறு திறன்களை உள்ளடக்கிய அறிவாற்றல் செயல்பாடு மேம்பட்டது. இந்த ஆய்வு தொடர்பான தகவல்கள் journal Brain Sciences மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது. 


சரும ஆரோக்கியம்
பீட்டா கரோட்டின் என்பது இயற்கையாகவே புற ஊதா கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கும் சன் ஸ்கிரீனாக செயல்படுகிறது. சூரிய ஒளியின் அபாயத்தைக் குறைக்கும் பீட்டா கரோட்டின் சருமத்திற்கு ஆரோக்கியத்தை மட்டுமல்ல பளபளப்பைக் கொடுக்கும், 


பீட்டா கரோட்டின் தேவை என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும், ஆனால் ஒரு பொதுவான வழிகாட்டுதல்களில்ன் படி, வயது வந்தவர்களுக்கு நாளொன்றுக்கு சுமார் 3,000 முதல் 6,000 மைக்ரோகிராம் வரை பீட்டா கரோட்டின் இருந்தால் போதும். 


மேலும் படிக்க | நீரிழிவு நோயாளியா நீங்கள்? சுகர் லெவலை குறைக்க சூப்பரான டயட் ஃபார்முலா இதோ!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ