ஒரே நாளில் உங்கள் வயிற்றை சுத்தம் செய்ய... நீங்கள் செய்ய வேண்டியவை!

Stomach Detox: வயிற்றையும் அனைத்து செரிமான அமைப்புகளையும் முழுமையாக சுத்தம் செய்ய, நீங்கள் சில முக்கியமான வைத்தியங்களை முயற்சி செய்யலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 28, 2023, 03:45 PM IST
  • வயிற்றில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்யும் இஞ்சியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளன.
  • காஸ்ட்ரோபரேசிஸ் ஏற்பட்டால் ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.
  • காஸ்ட்ரோபரேசிஸ் என்பது நமது வயிற்று தசைகளை பாதிக்கும் ஒரு நிலை.
ஒரே நாளில் உங்கள் வயிற்றை சுத்தம் செய்ய... நீங்கள் செய்ய வேண்டியவை!

Clean Your Stomach in One Day: வயிறு மற்றும் செரிமான அமைப்பு மற்றும் உறுப்புகள் சரியாக இல்லை என்றால் ஏற்படும் காஸ்ட்ரோபரேசிஸ் என்பது நமது வயிற்று தசைகளை பாதிக்கும் ஒரு நிலை. இதன் காரணமாக, செரிமான அமைப்பு த் தொடங்குகிறது. இதன் காரணமாக, வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன. இது மட்டுமின்றி, காஸ்ட்ரோபரேசிஸ் ஏற்பட்டால் ஊட்டச்சத்து குறைபாடு, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு மற்றும் நீரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்நிலையில், இது போன்ற பாதிப்பில் இருந்து தப்பிக்க வயிற்றையும் அனைத்து செரிமான அமைப்புகளையும் முழுமையாக சுத்தம் செய்ய, நீங்கள் சில முக்கியமான வைத்தியங்களை முயற்சி செய்யலாம். இன்று இந்த கட்டுரையில் உங்கள் உடலின் அனைத்து செரிமான உறுப்புகளையும் 1 நாளில் சுத்தம் செய்யக்கூடிய சில முக்கியமான வீட்டு வைத்திய முறையை அறிந்து கொள்வோம்: 

Add Zee News as a Preferred Source

ஒரே நாளில் வயிற்றை சுத்தம் செய்வது எப்படி?  (Easy Ways To Clean Stomach)

நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்கவும்

உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற (Body Detox), முதலில் உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க முயற்சிக்கவும். இது உங்கள் செரிமானத்தை மேம்படுத்ததும் மிக சிறந்த வழி. ஒரு நாளைக்கு குறைந்தது 2 கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிக்க முயற்சி செய்யுங்கள். இதனால் பெருங்குடலை சிறப்பக செலவின்றி சுத்தம் செய்யலாம்.

நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ளுங்கள்

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த, நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ளுங்கள். நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதன் மூலம் வயிற்றில் சேரும் அழுக்குகளை அகற்றலாம். மேலும், குடல் இயக்கத்தின் போது ஏற்படும் பிரச்சனையை நீக்க உதவுகிறது. பேரிக்காய், ஆப்பிள், கேரட், பப்பாளி போன்ற உணவுகளை அதிக நார்ச்சத்து நிறைந்த உணவாக உட்கொள்ளலாம்.\

மேலும் படிக்க | PCOS பெண்கள் உடல் எடையை குறைக்க காலையில் இந்த பானங்களை குடித்தால் போதும்

தேன் மற்றும் எலுமிச்சை தண்ணீருடன் காலையைத் தொடங்குங்கள்

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, தேன் மற்றும் எலுமிச்சை நீர் உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கும். தினமும் காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கவும். இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

1 கப் மூலிகை தேநீர் குடிக்கவும்

உடலில் உள்ள அழுக்குகளை நீக்க மூலிகை தேநீர் அருந்தலாம். மூலிகை டீ வடிவில், இஞ்சி, இலவங்கப்பட்டை போன்ற மூலிகைகளிலிருந்து தேநீர் தயாரித்து குடிக்கலாம். அவை ஆண்டிமைக்ரோபியல் பைட்டோகெமிக்கல்களில் நிறைந்துள்ளன, அவை உங்கள் உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் கொண்டவை. இதன் மூலம் மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனைகளை குறைக்கலாம்.

அழுக்குகளை வெளியேற்றும் இஞ்சி 

வயிற்றில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்யும் இஞ்சியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளன. தொடர்ந்து இஞ்சியை உட்கொள்வது பெருங்குடல் அழற்சியைக் குறைக்க உதவும். இது பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கும்.

உடலில் உள்ள அழுக்குகளை அகற்ற மேலூ கூறப்பட்டுள்ள கை வைத்தியங்களின் உதவியை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், உங்கள் பிரச்சனை கணிசமாக அதிகரிக்கிறது என்றால், அத்தகைய சூழ்நிலையில், நிச்சயமாக மருத்துவ நிபுணரின் ஆலோசனையை பெறவும்.

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 'சூப்பர்' உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News