Health Tips: சீரகம் பல நன்மைகளை கொண்டுள்ள மிகவும் முக்கியமான ஒரு மசாலா ஆகும். இது சுவையை சேர்ப்பதுடன் பல வித ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றது.
நமது சமையலறைகளில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் சமையலின் இன்றியமையாத அம்சங்களாக உள்ளன. உணவின் சுவையையும், நறுமணத்தையும், குணத்தையும் மேன்படுத்துவதில் இவற்றின் பங்கு மிக முக்கியமானது. பல வகையான மசாலாக்களால் உருவாக்கப்படும் பண்டங்கள் நம் பசித்த வயிற்றுக்கு விருந்தாகின்றன. நாம் பயன்படுத்தும் மசாலாக்களில் சீரகமும் ஒன்றாகும். உணவின் சுவையை அதிகரிப்பதுடன் இதில் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. சீரகத்தின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.
சீரகத்தின் பெயரிலெயே அதன் குணம் வெளிபப்டுகின்றது. சீரகம் என்றால் 'சீர்-அகம்' என்று பொருள். அகமாகிய நம் உடலை சீர்செய்யும் பணியை அது செய்கிறது. சீரகம் கிட்டத்தட்ட அனைத்து இந்திய உணவிலும் சேர்க்கப்படும் ஒரு மசாலா ஆகும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரகத்தை உட்கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கும். இந்த பதிவில் சீரகத்தை உட்கொள்வதன் நன்மைகளை பற்றி காணலாம். இரும்புச்சத்து, தாமிரம், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீஸ், ஜிங்க் மற்றும் மெக்னீசியம், நார்ச்சத்து போன்ற பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சீரகத்தில் நிறைந்துள்ளன.
சீரகத்தில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. எனவே, இது உங்கள் சருமத்தை அனைத்து வகையான தொற்றுநோய்களிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது. இது உங்கள் சருமத்தை (Skin Care) ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும்.
செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், தினமும் வெறும் வயிற்றில் சீரகத்தை உட்கொள்ள வேண்டும். இது அஜீரணம், வாயு மற்றும் மலச்சிக்கல் (Constipation) தொடர்பான பிரச்சனைகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறது. உங்கள் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தவும் சீரகம் உதவுகிறது.
உங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்ந்திருந்தால், சீரகத்தை தினமும் உட்கொள்ள வேண்டும். இதனை உட்கொள்வதால், உங்கள் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் படிப்படியாகக் குறைய ஆரம்பித்து, உடல் எடையைக் குறைப்பது (Weight Loss) எளிதாகிறது.
இரவில் தூங்கும் முன், இரண்டு ஸ்பூன் சீரகத்தை ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் போடவும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சீரக நீரை கொதிக்க வைக்காமல் அப்படியே குடிக்கவும். இதற்குப் பிறகு, மீதமுள்ள சீரகத்தை மென்று சாப்பிடவும். இது உடல் எடையை குறைக்க மிகவும் உதவும்.
உங்கள் தொப்பையை குறைக்க சீரகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கு. இது பசியைக் குறைத்து, நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது. இது நீர் தேக்கத்தையும் குறைக்கிறது. இதனால் உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பை குறைத்து எடையை குறைக்க சீரகம் அருமருந்தாக உதவும்.